ஞாயிறு, 16 ஜூன், 2019

ரஞ்சித் ஆர் எஸ் எஸ் இன் நிகழ்ச்சி நிரலுக்கு செயல்படுகிறாரா?


கி.பிரியாராம் கிபிரியாராம் : தமிழ் ஆளுமைகளை இழிவு படுத்தும் மிகப்பெரிய சூழ்ச்சி திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டு வருகிறது.
ஒவ்வொரு முறையும் தமிழர்களுக்கு எதிராக மிகப்பெரிய அழிவுத் திட்டத்தை கொண்டு வந்து விட்டு, அவற்றிலிருந்து தமிழர்களை திசைதிருப்ப ஏதாவது ஒரு தமிழ் ஆளுமை, மரபு பற்றி அவதூறு பரப்பப் படுகிறது.
அணுக்கழிவு மையம், 250 இடங்களில் ஹைட்ரோ கார்பன் கிணறுகள், மும்மொழிக் கொள்கை, வரலாறு காணாத தண்ணீர் பஞ்சம், EVM தில்லுமுல்லு இவற்றையெல்லாம் பற்றி மக்களை சிந்திக்க விடாமல் இருக்க தற்போது ராஜராஜன் பற்றி அவதூறு பரப்பப்படுகிறது.
தமிழர்களின் ஒற்றுமையே அவர்களின் பலம். அந்த ஒற்றுமைக்கு முக்கிய காரணம் தமிழ் பண்பாடு மீதான தமிழர்களின் ஈர்ப்பு. தமிழர்களின் ஒற்றுமையை சிதைக்க அவர்களின் பண்பாட்டு பெருமையை தகர்ப்பது அவசியமாகிறது. அதன் அடிப்படையில்தான் தற்போது அவதூறுகள் பரப்பப் படுகின்றன.

உலக வரலாற்றில் உள்ள அனைத்து மன்னராட்சியும் ஏதோ ஒருவித சர்வாதிகாரத்தில் தான் இயங்கி வந்தது. ஆனால், ராஜராஜன் பல்வேறு சாதனைகளை நடத்திக் காட்டியவன். போர்திறமை மட்டுமல்லாமல் கட்டிடக்கலை, சிற்பக்கலை, ஆடல் கலை, இசை, இலக்கியம் என பல துறைகளில் சாதனை படைத்தவன்.
வரலாற்று விமர்சனம் என்பது ஏற்கக்கூடியது. ஆய்வுகளோடு கூடிய விமர்சனம் தவறுகளை திருத்தி நம்மை சரியான பாதையில் முன்னெடுக்க உதவும். ஆனால், தற்போது செய்யப்படுவது திட்டமிட்ட அவதூறு. ராஜராஜனின் அரிய பல சாதனைகளை மறைத்து விட்டு, ஒரு சில குறைபாடுகள் மட்டும் ஊதி பெரிதாக்கப்பட்டு வருகிறது.
கீழடி நாகரீகத்தை விட முற்போக்கான வளர்ச்சி அடைந்த நாகரீகம் இதுவரை உலகில் கண்டுபிடிக்கப்படவில்லை. கிரேக்க, ரோமானிய நாகரீகத்தை விட கீழடி நாகரீகம் தொன்மையும், வளர்ச்சியும் கொண்டது.
எனவே, தமிழர்கள் தங்கள் பண்பாடு, வரலாறு குறித்து பெருமை கொள்வது மிக அவசியமானது.
தேவையற்ற சர்ச்சைகளை பரப்புபவர்களை புறக்கணித்து, மக்கள் தங்கள் அன்றாட வாழ்வாதார பிரச்சனைகளை விவாதிக்க வேண்டும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக