செவ்வாய், 18 ஜூன், 2019

தமிழக எம்பிக்கள் வைத்த கோரிக்கைகள்.. அனைத்து கட்சி கூட்டத்தில்.. நீட் ரத்து .. காவிரி நீர் . ஹைட்ரோ கார்பன் ...

நேற்று நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் தமிழக எம்பிக்கள் வைத்த
கோரிக்கை!!!
பாஜக பிரகலாத் ஜோஷி  அவரது துணை அமைச்சர்களும் காங்கிரஸ் கட்சியின்
குலாம் நபி ஆசாத் ,சி பி ஐ டி  ராஜா ..சி பி எம்  நடராஜ்  மற்றும் அனைத்து கட்சி தலைவர்களும் கலந்து கொண்டுள்ளனர்
 அதில்தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன் வைத்த கோரிக்கைகள்:
ஏழை கிராம புற மாணவர்களின் மருத்துவ கல்வியை  நசுக்கும் நீட் தேர்வு ரத்து செய்யும் 18 - 02 - 2017  அன்று தமிழக சட்டசபையில் நிறை வேற்றப்பட்ட தீர்மானத்திற்கு ஒப்புதல் அளிக்கவேண்டும்.
காவிரி டெல்டா மாவட்டங்களில் கடந்த 8 ஆண்டுகளாக குருவை சாகுபடி இல்லாத நிலையில் 28- 05 - 2019  அன்று   9.19 டி எம் சி தண்ணீரை தமிழகத்துக்கு தரவேண்டும் என்று காவிரி மேலாண்மை வாரியம் அளித்த தீர்ப்பினை உடனடியாக நிறைவேற்றும் வகையில் , தமிழகத்திற்கு 9. 19 டி எம் சி தண்ணீரை தர கர்நாடக அரசுக்கு அழுத்தம் தரவேண்டும்.

மத்திய அரசின் உத்தரவின்படி சில தனியார் நிறுவனங்களுக்கு ஹைட்ரோ கார்பன் திட்டத்தை நிறைவேற்றிட காவிரி பாயும் டெல்டா மாவட்டங்களில் உள்ள விவசாய நிலங்களில் செயல்படுத்தப்படும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.
தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சியை சேர்ந்த 55 பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் சேர்ந்து மேகதாது அணைகட்ட அனுமதிக்கக் கூடாது என்ற கோரிக்கையையும் வைத்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக