வெள்ளி, 28 ஜூன், 2019

முஸ்லிம்கள் தாமாக இஸ்லாத்தை கைவிட்டால் கூட இடதுசாரி மனநோயாளர்கள் அதை விரும்ப மாட்டார்கள்

வசமாக மாட்டிக்கொண்ட பின்னர் சஹ்ரான் உண்மையான முஸ்லிம் இல்லை, பின்லாடன் உண்மையான முஸ்லிம் இல்லை, அஷ்ஷெய்க் கஞ்சிப்பனை இம்ரான் உண்மையான முஸ்லிம் இல்லை என்று சொல்வது போன்று 
மாஒ உண்மையான கம்யூனிஸ்ட் இல்லை, ஸ்டாலின் உண்மையான கம்யூனிஸ்ட் இல்லை, சீனா உண்மையான கம்யூனிஸ்ட் இல்லை, தேங்காய்ப் பானை (பொல்பொட் - පොල් Pot ) உண்மையான கம்யூனிஸ்ட் இல்லை, கார்ல் மார்க்ஸ் உண்மையான கம்யூனிஸ்ட் இல்லை, கலையரசன் உண்மையான கம்யூனிஸ்ட் இல்லை, மோகனா தர்ஷினி உண்மையான கம்யூனிஸ்ட் இல்லை என்று சொல்லிக்கொண்டு கூட சிலர் வரலாம். Image may contain: text
Rishvin Ismath : கம்யூனிசம் :
1. கம்யூனிசம் மதங்களை விடவும் பயங்கரமானது என்று சொல்வதன் காரணம் புரிகின்றதா? (ஸ்க்ரீன் சொட் பாருங்கள்.) மதங்கள் கடவுளின் பெயரால் வன்முறைகளை, கூட்டுப் படுகொலைகளை நியாயப்படுத்தி, மாற்றுக் கருத்துக்களை 'மத நிந்தனை' என்ற பெயரில் நசுக்குவதற்கு ஒப்பாக அல்லது அதை விடவும் கேவலமாக இவை அனைத்தையும் கம்யூனிசம் "புரட்சி" யின் பெயரால் செய்கின்றது.
மனிதர்களின் நிகழ்காலப் பிரச்சினைக்கு கம்யூனிசம் ஒரு தீர்வு அல்ல, அது ஒரு மாயை மட்டுமே. கம்யூனிசத்திற்கு ஆட்சி, பலம், அதிகாரம் இல்லாத வரை நல்ல பிள்ளை வேடம் போட்டு நடித்துக்கொண்டு இருக்கும், அவ்வளவுதான். ஆட்சி, அதிகாரம், பலம் இல்லாத நேரத்தில் கம்யூனிசத்தின் வேடத்தைக் கண்டு ஏமாறும் நல்ல உள்ளம் கொண்ட பலர் கம்யூனிசத்திற்கு பலியாகி மூளைச்சலவைக்கு உள்ளாகி விடுவதுண்டு. வாழ்வில் பெரும்பாலும் நல்லவர்களாக இருந்தாலும், சில பொழுதுகளில் அவர்களிடமும் கம்யூனிஸ குணங்கள் தலைகாட்ட ஆரம்பித்து விடும். (அனுபவத்தில் கண்டது.)

2. இடதுசாரி அரசியல் சந்தர்ப்பவாதம் படு கேவலமான நிலையை அடைந்து விட்டது. முஸ்லிம்கள் தாமாக இஸ்லாத்தை கைவிட்டால் கூட இந்தக் கேவலமான இடதுசாரி மனநோயாளர்கள் அதை விரும்ப மாட்டார்கள் போலும். இவர்களே முஸ்லிம்களிடம் சென்று "உங்கள் மதம், நீங்கள் அதை பின்பற்ற வேண்டும், தீவிரமாக பின்பற்றும் உரிமை உங்களுக்கு உள்ளது. தற்கொலைத் தாக்குதல்கள், குண்டுவெடிப்புகளை நிகழ்ந்த வேண்டுமா இல்லையா என்பதை முடிவுசெய்யும் உரிமை உங்களுடையது, அதனை வேறு யாரும் உங்கள் மீது திணிக்க முடியாது, உங்கள் உரிமையை நீங்கள் பயன்படுத்துங்கள்" என்று போதனை செய்வார்கள் போலும். இந்த இடதுசாரிகளை சந்திக்க முன்னர் எனக்கு இடதுசாரிகள் பற்றி நல்லெண்ணம் இருந்தது, ஆனால் இவர்கள் இவ்வளவு சந்தர்ப்பவாதிகள் என்று தெரிந்த பின்னர் நான் இஸ்லாத்தை விடவும் மனிதகுலத்திற்கு எதிரியாக இந்த இடதுசாரியத்தையே பார்க்கின்றேன். இஸ்லாத்தில் இருப்பதை விடவும் கேவலமான தக்கியா (பாசாங்கு) இவர்களிடம்தான் இருக்கின்றது.
மனித குலத்தை மேம்படுத்துவது இவர்களின் நோக்கமல்ல, பிச்சைக்காரனின் புண் போன்று இவர்கள் அரசியல் செய்வதற்காக எப்பொழுதும் பிரச்சினைகள் உருவாகிக் கொண்டே இருக்க வேண்டும் என்பதே இவர்களின் எதிர்பார்ப்பு, அதற்கு இஸ்லாத்தின் இருப்பும் இவர்களிற்கு முக்கியம். ஆடுகளின் மரண வீட்டில் நீலிக் கண்ணீர் வடித்து அரசியல் செய்வதற்காக இவர்களே ஓநாயை வளர்த்து விடுகின்றார்கள்.
3. கம்யூனிஸத்தில் இருந்து தமிழ் பேசும் மக்களை பாதுகாக்க பெரும் தொண்டாற்றும் Kalai Marx (கலையரசன்)!
கம்யூனிஸம் குறித்து மிகவும் நல்லபிப்பிராயத்துடன் இருந்த எனக்கு, கம்யூனிஸம் மோசமானது, ஆபத்தானது, நேர்மையற்றது, குரூரமானது மற்றும் மனித வாழ்க்கைக்குப் பொருத்தமற்றது என்பதையெல்லாம் முதலில் புரிய வைத்த சாதனை திருவாளர் கலையரசனையே சாரும். கலையரசன் புரிய வைத்தவற்றை உண்மை என்று தமது பேச்சுக்கள், எழுத்துக்கள் மற்றும் செயல்களால் உறுதிப்படுத்திய பெருமை எனது கம்யூனிஸ நண்பர்களைச் சாரும்.
கலையரசனின் பதிவுகளையும், அவற்றில் உள்ள பின்னூட்டங்களுக்கு அவர் பதிலளிக்கும் நேர்மையையும் (? 😂 ) பார்த்த பிறகுதான் கம்யூனிஸம் என்பது ஒரு பொய், மாயை, ஆபத்தானது, குரூரமானது. நாமறிந்த மதங்களை விடவும் கொடூரமானது என்று உணர ஆரம்பித்தேன், சில கம்யூனிஸ நண்பர்கள் அதனை தாமாகவே உறுதி செய்து நான் கம்யூனிஸ மாயையில் இருந்து முற்றாக விடுபட உதவினார்கள்.
சில கம்யூனிஸ நண்பர்கள் உண்மையிலே நல்லவர்கள் என்று நான் இன்னுமும் நம்புகின்றேன், எனினும் அவர்கள் கம்யூனிஸத்தால் மூளைச்சலவைக்கு உள்ளக்கப்பட்டோ அல்லது வேறு எதோ வகையிலோ பலிக்கடா ஆக்கப் பட்டுள்ளார்கள், அடிமைகள் ஆகியுள்ளார்கள் என்றே நம்புகின்றேன். கம்யூனிசத்தால் மூளைச்சலவைக்கு உள்ளாக்கப்பட்டு, அடிமைகள் ஆக்கப்பட்டுள்ள நண்பர்கள் சுயமாக சிந்தித்து அதிலிருந்து முற்றாக விடுபட்டு விடுதலை அடைவார்கள் என்றால் மகிழ்ச்சியே.
( கம்யூனிஸத்தால் அடிமையாக்கப்பட்டுள்ள நல்ல நண்பர்கள் இந்தப் பதிவை பார்த்து மனமுடையவோ, கோபம் கொண்டு சண்டைக்கு வரவோ தேவையில்லை, சற்று சுயமாக சிந்தித்தால் போதுமானது.)
குறிப்பு : வசமாக மாட்டிக்கொண்ட பின்னர் சஹ்ரான் உண்மையான முஸ்லிம் இல்லை, பின்லாடன் உண்மையான முஸ்லிம் இல்லை, அஷ்ஷெய்க் கஞ்சிப்பனை இம்ரான் உண்மையான முஸ்லிம் இல்லை என்று சொல்வது போன்று மாஒ உண்மையான கம்யூனிஸ்ட் இல்லை, ஸ்டாலின் உண்மையான கம்யூனிஸ்ட் இல்லை, சீனா உண்மையான கம்யூனிஸ்ட் இல்லை, தேங்காய்ப் பானை (பொல்பொட் - පොල් Pot ) உண்மையான கம்யூனிஸ்ட் இல்லை, கார்ல் மார்க்ஸ் உண்மையான கம்யூனிஸ்ட் இல்லை, கலையரசன் உண்மையான கம்யூனிஸ்ட் இல்லை, மோகனா தர்ஷினி உண்மையான கம்யூனிஸ்ட் இல்லை என்று சொல்லிக்கொண்டு கூட சிலர் வரலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக