வியாழன், 20 ஜூன், 2019

குடிநீர் பிரச்சினையை அரசியலாக்கக் கூடாது.. அமைச்சர் ஜெயக்குமார் ..

D.Jayakumar says that Water problem should not be politicised
/tamil.oneindia.com - lakshmi-priya.: சென்னை: குடிநீர்
பிரச்சினையை அரசியலாக்கக் கூடாது என அமைச்சர் ஜெயக்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார். சென்னை நந்தம்பாக்கத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சிக்கு பிறகு செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறுகையில் ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது பற்றி முழுவதும் விவாதிக்கப்பட வேண்டியதுள்ளது. சட்டசபை தேர்தல் வெவ்வேறு தேதிகளில் நடத்தப்படுகிறது. ஆனால் மக்களவை  தேர்தல் நாடு முழுவதும் ஒரே நேரத்தில் நடத்தப்படுகிறது.
 இதனால் ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. அதற்கெல்லாம் விடைகள் காணப்பட வேண்டும். இந்த விஷயத்தில் அரசின் சார்பிலும் கட்சியின் சார்பில் கருத்து தெரிவிப்போம். நீர் மேலாண்மையை பொருத்தமட்டில் தமிழக அரசு எவ்வளவு செய்ய முடியுமோ அநத அளவுக்கு பணிகளைச் செய்துள்ளது.
குடிமராமத்து பணிகள் போன்ற பல்வேறு பணிகள் போன்ற பல்வேறு பணிகள் நடந்த வருகின்றன. நிகழ் நிதியாண்டில் கூட குடிமராமத்து திட்டப் பணிக்கு ரூ 499 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

40 சதவீதம் மழை மட்டுமே மழை பெய்துள்ளது. இந்தச் சூழ்நிலையையும் அரசு எதிர்கொண்டு சமாளித்து வருகிறது. இந்த பிரச்சினையில் அரசியல் செய்வது என்பது ஏற்றுக் கொள்ள முடியாதது. இயற்கை கைகொடுக்கிற நிலையில் 500 லாரிகள் மூலமாக 9 ஆயிரம் தடவை தினமும் தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது. எனவே குடிநீர் பிரச்சினையை எதிர்க்கட்சிகள் அரசியலாக்க வேண்டாம் என கேட்டுக் கொண்டா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக