வியாழன், 27 ஜூன், 2019

ஆண்ட்ராய்டிடம் விண்டோஸ் வீழ்ந்த கதையை மீண்டும் நினைவுகூர்ந்திருக்கிறார் பில்கேட்ஸ்.

Viakatan -மு.ராஜேஷ் :க&  :  டந்த நூற்றாண்டின்
ஆண்ட்ராய்டு
இறுதியில் பிரபலமாகத் தொடங்கிய கம்ப்யூட்டரை உலகமெங்கும் கொண்டு சேர்த்ததில் மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸுக்கு மிகப் பெரிய பங்குண்டு. ஆனால் இன்று கம்ப்யூட்டர் ஆபரேட்டிங் சிஸ்டத்தின் சந்தையில் பெரும் பகுதியைக் கையில் வைத்திருக்கும் அவருக்கு மொபைல் மென்பொருள் துறையில் பெரிய அளவில் சாதிக்க முடியவில்லை என்ற ஏக்கம் இருந்து கொண்டேயிருக்கிறது. சில நாள்களுக்கு முன்னால் வில்லேஜ் குளோபல் என்ற அமைப்பு நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் “நான் செய்த மிகப் பெரிய தவறு இதுவாகத்தான் இருக்கும்” என அது தொடர்பாகப் பேசியிருக்கிறார் பில் கேட்ஸ். தப்புக் கணக்குப் போட்ட பில்கேட்ஸ்
2005-ம் ஆண்டில் கூகுள் நிறுவனம் ஆண்ட்ராய்டை வாங்கியது. அதை வாங்கும் போது கூகுளிடம் பெரிதாகத் திட்டம் எதுவும் இல்லை. 2007-ம் ஆண்டு முதல் ஐபோனை ஆப்பிள் வெளியிட்ட பிறகு ஸ்மார்ட்போன் சந்தை சூடுபிடிக்கத் தொடங்கியது.

அதற்குப் போட்டியாக கூகுளும் அதற்கடுத்த வருடமே ஆண்ட்ராய்டைக் களமிறக்கி விட்டது. இப்படி அனைத்து நிறுவனங்களுமே மொபைல் ஆபரேட்டிங் சிஸ்டத்தை அறிமுகப்படுத்திக் கொண்டிருக்க பில்கேட்ஸும் அதற்குத் தயாரானார். மைக்ரோசாஃப்ட்டும் மொபைல்களுக்கான விண்டோஸ் ஆபரேட்டிங் சிஸ்டத்தை உருவாக்கியது. கம்ப்யூட்டர் மென்பொருள் சந்தையிலேயே சாதித்து விட்டோம் மொபைல் சந்தையும் தன் வசம்தான் இருக்கப்போகிறது என நினைத்தார் பில்கேட்ஸ். மைக்ரோசாஃப்ட் நோக்கியா நிறுவனத்துடன் விண்டோஸ் ஆபரேட்டிங் சிஸ்டத்தைப் பயன்படுத்த ஒப்பந்தம் செய்தது. மொபைல் துறையில் ஜாம்பவானாக இருந்த நோக்கியாவும், மென்பொருள் துறையில் ஜாம்பவானாக இருந்த மைக்ரோசாஃப்ட்டும் கைகோத்தது மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
கூகுளிடம் வீழ்ந்த மைக்ரோசாஃப்ட்
மைக்ரோசாஃப்ட்
முதல் ஆண்ட்ராய்டு மொபைல் அறிமுகமாகி பத்து வருடங்கள் கடந்து விட்டன. இடைப்பட்ட காலத்தில் அசுர வேகத்தில் வளர்ந்த அது போட்டியாளர்களையெல்லாம் ஓரம் கட்டி விட்டது. கூகுளிடம் இருக்கும் மிகப்பெரிய சொத்து ஆண்ட்ராய்டு என பில்கேட்ஸே வாக்குமூலம் கொடுக்கிறார். ஆண்ட்ராய்டை வாங்கும் போது கூகுள் வேண்டுமானால் எதிர்காலத்தில் இது அசைக்க முடியாத இடத்தைப் பிடிக்கும் என நினைத்திருக்கலாம். ஆனால் போட்டி நிறுவனங்கள் அப்படி நினைக்கவில்லை. பில் கேட்ஸும் அப்படித்தான் நினைத்திருந்தார். ஏனென்றால் அதுவரை இருந்த வரலாறு அப்படி. ஒரு கம்ப்யூட்டருக்கு ஆபரேட்டிங் சிஸ்டம் என்றாலே அது விண்டோஸ்தான் என்ற நிலையை மைக்ரோசாஃப்ட் உருவாக்கியிருந்தது. அப்போதே ஓப்பன் சோர்ஸ் இயங்குதளங்கள் பயன்பாட்டில் இருந்தாலும் பெரிதாகப் பிரபலமாகாமல் இருந்தன. மொபைல் சந்தையும் அப்படித்தான் இருக்கும் என நினைத்தார் பில் கேட்ஸ்.
ஆனால் இந்த விஷயத்தில் அவர் நினைத்தது நடக்கவில்லை. காரணம் இரண்டுக்குமான சந்தை என்பது வெவ்வேறாக இருந்தது. ஒரு கம்ப்யூட்டருக்கான விலை ஒரு ஸ்மார்ட்போனுடன் ஒப்பிடும் போது அதிகமாகவே இருந்தது. காரணம் ஹார்ட்வேர் செலவுகளுடன், மென்பொருள்களுக்கான செலவும் அதன் விலையில் அடக்கம். அதை மாற்றி எழுதியது ஆண்ட்ராய்டு. ஓப்பன் சோர்ஸ் ஆபரேட்டிங் சிஸ்டமான ஆண்ட்ராய்டை மொபைல் நிறுவனங்களுக்கு இலவசமாகவே கொடுத்தது கூகுள். தேவைப்பட்டால் அதில் மாற்றங்களையும் செய்து நிறுவனங்கள் செய்து கொள்ள முடிந்தது. அதனால் ஆபரேட்டிங் சிஸ்டத்துக்கான செலவை வெகுவாகக் குறைக்க முடிந்தது. தயாரிப்பாளருக்கும் லாபம், வாடிக்கையாளருக்கும் லாபம்.
பில் கேட்ஸ்
இன்றைக்கும் ஒரு சாதனத்தைப் பயன்படுத்திக்கொண்டிருக்கும் பலருக்கு அது காப்புரிமை மென்பொருளா அல்லது ஓப்பன் சோர்ஸ் மென்பொருளா என்பது தெரியாது. அது திரைக்கு மறைவில் நடக்கும் ஒரு வர்த்தகம். ஆண்ட்ராய்டுக்கும், விண்டோஸுக்கும் மிகப்பெரிய அளவில் வித்தியாசம் இருந்தது அந்த இடத்தில்தான். ஆண்ட்ராய்டு சாமானியர்களின் கைகளுக்கும் செல்ல ஆரம்பித்தது. அதனால் சந்தையில் அதன் இடம் பெருமளவு அதிகரித்தது. மறுபக்கம் காப்புரிமை ஆபரேட்டிங் சிஸ்டமான விண்டோஸைப் பயன்படுத்திய நோக்கியாவின் மொபைல்களின் விலை அதிகமாகவே இருந்தது. எனவே அவற்றை வாங்க மக்கள் தயங்கினார்கள். இதனால் மைக்ரோசாஃப்ட்டை விடவும் அதிக பாதிப்பு நோக்கியாவுக்குத்தான். அதனுடன் செய்து கொண்ட ஒப்பந்தப்படி ஆண்ட்ராய்டைப் பயன்படுத்த முடியாத நிலையில் நோக்கியா இருந்தது. அதுவே அதன் சரிவுக்கு மிகப்பெரிய காரணமாகவும் அமைந்தது. இறுதியாக மொபைல் தயாரிப்பிலிருந்து விலகிக் கொண்டது மைக்ரோசாஃப்ட். அதுமட்டுமல்ல விண்டோஸ் மொபைல் ஆபரேட்டிங் சிஸ்டத்துக்கும் முடிவு கட்டியது.
கூகுளுக்கு எதிராக பில் கேட்ஸ் எடுத்த நடவடிக்கைகள் அனைத்தும் பலனளிக்கவில்லை. அதுதான் இப்போது அவரை வருத்தப்படவைத்திருக்கிறது. “மைக்ரோசாஃப்ட் மீது முழுக் கவனத்தையும் வைத்திருந்ததும், ஆண்ட்ராய்டை கவனிக்காமல் விட்டதும்தான் நான் செய்த மிகப்பெரிய தவறு” என்கிறார் பில்கேட்ஸ், அது ஒரு வகையில் உண்மையும் கூட.
vikatan.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக