Cable Sankar : அண்ணா நகரில் உள்ள ஒரு உணவக உரிமையாளரிடம் பேசிக் கொண்டிருந்தேன்.
தண்ணீர் பிரச்சனை, வேலையாட்கள் பிரச்சனை என பல பிரச்சனைகளைப் பற்றி
சொல்லிக் கொண்டிருந்தார். முக்கியமான சமீபத்திய பிரச்சனை கார்பரேஷன் குப்பை
வார வர மாட்டேன் என்கிறார்கள் என்பதுதான் என்றார்.
என்னா சார் அவங்க குப்ப வாராம எப்படி? என்று கேட்டேன். வழக்கமா மாசம் மூவாயிரம் ரூபாய் கொடுப்போம் வந்து குப்பை வாரிட்டு போக. இது போல பொங்கல் தீபாவளி, ஆயுத பூஜைன்னு தனி. ஆனா சமீப காலமா அவங்க குப்பைலேர்ந்து பயோ கேஸ் தயார் பண்ணுற ப்ரோக்ராம்ல இருக்காங்காலாம். அதனால எங்களை தனித் தனியாய் குப்பைகளை பிரிச்சுத் தரச் சொன்னாங்க. பிரிக்க ஆரம்பிச்சது. எங்களால வந்து கலெக்ட் பண்ண முடியாது. அதனால நீங்களே குப்பைகளை செக்ரிகேட் பண்ணி அதை நாங்க சொல்லுற இடத்துல வந்து கொடுத்துட்டுப் போங்க என்கிறார்கள்.

தெனம் குப்பைய செக்ரிகேட் பண்ணுறது ஒரு வேலைன்னா, அதை தனித்தனியா
பிரிச்சு, வண்டி வச்சி, ஒரு ஆளை இதுக்காக அப்பாயிண்ட் பண்ணி கொண்டு போய்
அவங்க சொல்லுற இடத்துல கொடுக்கணும். அதுக்கு குறைந்த பட்சம் மூணு மணி
நேரத்துக்கு மேல ஆகுது. அப்படி நாமளே கொண்டு போய் கொடுக்குற குப்பைய
வாங்குறதுக்கு ரெண்டாயிரம், மூவாயிரம் கொடுக்க வேண்டியிருக்கு. என்று
புலம்பினார்.
குப்பைய எடுக்க வேண்டியது கார்பரேஷனின் கடமை. இல்லையா? என்று ஆதங்கத்துடன் கேட்டேன்.
கடமைதான். யாரு இல்லைன்னா. இதுக்கு பின்னாடி ஒரு பிஸினெஸ் இருக்கு. கார்பரேஷன் மூலமா குப்பைகளை நாமளே பயோ கேஸா மாத்தி யூஸ் பண்ணிக்கிற மிஷின் ஒன்றை ப்ரோமோட் பண்ணுறாங்க. மிஷின் விலை குறைந்த பட்சம் ரெண்டு லட்சமாம். இங்கிருக்குற மீடியம் மற்றும் சிறிய கடைங்க எல்லாரையும் சேர்த்தா ஒரு முன்னூறு கடைங்க வரும் கணக்கு போட்டுப் பாருங்க. .என்றார்.
ஆட்சிய விட்டு போறதுக்குள்ள ஒரு பெரிய தொகை இல்லாம போக மாட்டாங்க போலயே..?
Cable Sankar.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக