வெள்ளி, 21 ஜூன், 2019

தெலுங்கான பாஜக எம்பி தன்தலையில் தானே கற்களால் அடித்துவிட்டு .. நாடகம் விடியோவில் அம்பலம்


ராஜா சிங்vikatan.com - சத்யா கோபாலன் :
தெலங்கானா சட்டமன்றத்தில், ராஜா சிங் மட்டுமே ஒரே ஒரு பா.ஜ.க எம்.எல்.ஏ-வாக உள்ளார். இவர், தன் செயலால் அடிக்கடி சர்ச்சையில் சிக்கிக்கொள்வதை வழக்கமாக வைத்துள்ளார். அதன் வரிசையில் தற்போது, மீண்டும் ஒரு பெரிய பிரச்னையில் சிக்கியுள்ளார்.<
நேற்று முன்தினம், அதாவது புதன்கிழமை நள்ளிரவு 2 மணியளவில், ராஜா சிங் தன் ஆதரவாளர்களுடன் ஹைதராபாத்தில் உள்ள சுதந்திரப் போராட்ட வீராங்கனையான ராணி அவந்தி பாய் சிலை அருகில் வந்து, அங்குள்ள பழைய சிலை எடுத்துவிட்டு புதுச் சிலையை நிறுவப்போவதாகத் தெரிவித்துள்ளார். இந்தத் தகவல் அறிந்ததும் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து, ‘ புதிய சிலை நிறுவ உங்களிடம் அனுமதி உள்ளதா’ எனக் கேட்டுள்ளனர். அதற்குள் போலீஸாருக்கும் ராஜா சிங் ஆதரவாளர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

ஆதரவாளர்களுடன் ராஜா சிங்
போலீஸார் தன்னை கல்லால் அடித்ததாகக் கூறி, அருகில் உள்ள மருத்துவமனையில் ராஜா சிங் அனுமதிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து, மருத்துவமனையில் இருந்த ராஜா சிங்கை பூங்கா தெலங்கானா பா.ஜ.க தலைவர் லக்‌ஷ்மன் மற்றும் பிற நிர்வாகிகள் வந்துள்ளனர்.
அவர்களிடம், ‘ நாங்கள் சிலை முன் இருக்கும்போது போலீஸ்காரர்கள் லத்தியுடன் வந்தனர். அவர்களைப் பார்த்ததும் நாங்கள் கற்களை கையில் எடுத்தோம். பின்னர், காவலர்கள் எங்களை பலமாகத் தாக்கினர். எங்களை இப்படித் தாக்குவதற்கு, கொன்றுவிட்டால் நல்லது என நான் கூறினேன். பிறகு, காவலர்களிடம் கற்களைக் கொடுத்துவிட்டோம்’ என அழுதபடி தெரிவித்துள்ளார். அவ்வளவுதான், இந்தப் பிரச்னை பூதாகரமாக வெடித்தது. தெலங்கானா பா.ஜ.க-வினர் காவலர்களைக் கடுமையான விமர்சித்தனர்.
இதனைத் தொடர்ந்து, நேற்று ஹைத்ராபாத் போலீஸ் கமிஷனர் அஞ்சனி குமார் தன் ட்விட்டரில், 16 விநாடிகள் ஓடும் ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார். அது, பா.ஜ.க நிர்வாகிகள் மட்டுமின்றி மொத்த தெலங்கானாவையும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது. வீடியோவில், பா.ஜ.க-வினரை காவலர்கள் தடுக்க முயல்கிறார்கள். அப்போது ராஜா சிங், தன் கையில் வைத்திருந்த கல்லால் தானே தலையில் அடித்துக்கொள்கிறார்.
இது தொடர்பாகப் பேசிய  காவல்துறை துணை ஆணையாளர் ஸ்ரீனிவாசன் ரெட்டி, “காவலர்கள் மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டு முற்றிலும் பொய்யானது. ராஜா சிங் தன்னைத் தானே தாக்கிக்கொள்ளும் காட்சி, வீடியோவின் மூலம் உறுதியாகியுள்ளது. அவரது தலையில் அடிபட்டதும் இப்படித்தான். ராஜா சிங் மற்றும் அவரது ஆதரவாளர்கள்மீது வழக்குப்பதிவு செய்துள்ளோம். காவலர்களைத் தாக்கியவர்களை விரைவில் கைதுசெய்வோம்” என்று தெரிவித்துள்ளார்.
இந்த வீடியோ விவகாரம் வெளியில் வந்த பிறகு, “காவலர்கள் எங்கள்மீது தடியடி நடத்திய பிறகு, நானே என்னைத் தாக்கிக்கொண்டேன்” என ராஜா சிங் புது விளக்கம் அளித்துள்ளா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக