செவ்வாய், 11 ஜூன், 2019

இறந்த குட்டிக்கு இறுதிக்கிரியை செய்யும் யானைக் கூட்டம் – வீடியோ

வீரகேசரி : இறந்த யானைக் குட்டியொன்றை தமது கூட்டத்துடன் இணைந்து அடக்கம் செய்வதற்காக தாய் யானை கொண்டு செல்லும் காட்சி இந்திய வனத்துறை உத்தியோகத்தரின் கமராவில் பதிவாகியுள்ளது.
பிரவீன் கேசவன் எனப்படும் குறித்த அதிகாரி, காணொளியை தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார். இக் காணொளி சமூக வலைத்தளங்களில் பலராலும் பகிரப்பட்டு வருவதுடன் வைரலாகியும் வரகின்றது. பலரது மனதினை உருக்கும் குறித்த காணொளியில் ஒரு யானை இறந்த குட்டியைத் தூக்கிச் சென்று வீதியில் வைத்து ஏனைய யானைகளின் வருகைக்காகக் காத்திருக்கின்றது.
அதனை பின் தொடர்ந்து ஏராளமான யானைகள் கூட்டமாக வருகின்றன. வீதியைக் கடந்து அனைத்தும் ஒன்றாகப் பயணிக்கின்றன. இறந்த தமது உறவுக்கு இறுதிக்கிரியை செய்வதற்காக. இந்த காணொளி தொடர்பில் யானைகளின் உணர்வு வெளிப்பாடு மனிதர்களையும் மிஞ்சியுள்ளதாகப் பலரும் தமது கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக