வெள்ளி, 28 ஜூன், 2019

நாங்கள் திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்! நாடாளுமன்றத்தில் மே.வங்க எம்பி அதிரடி . வீடியோ

வங்காளத்திலிருந்து ஒலிக்கும் திராவிடன் குரல் நேற்றைய பாராளுமன்ற பதிவு. நாங்கள் திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். எங்களுக்கென்று ஆயிரம் ஆண்டுகால வரலாறு உண்டு.
எங்கள் அடையாளத்தை மாற்றும் எதையும் நாங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டோம். ஆகவேதான் மேற்கு வங்காளம் என்கிற பெயரை மாற்ற வேண்டும் என்று கூறுகிறோம்.
நேற்று பாராளுமன்றத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சுகந்து சேகர் ராய் முழக்கம்.
கடந்த ஜூலை 2018 அன்று மேற்குவங்க சட்டசபையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஒரு தீர்மானத்தை முன்மொழிந்தது.
அதில் வங்க மொழி என்பது 'பங்கா' என்கிற திராவிட மொழி குடும்பத்தில் இருந்து வந்தது. நம்முடைய வரலாறு கிமு 1000 ஆண்டுகளில் இருந்து தொடங்குகிறது.
அப்படிப்பட்ட நம்மை இல்லாத அடையாளத்தின் கீழ் அடக்குவது என்பதை இனியும் நாம் பொறுத்துக் கொள்ள முடியாது.
ஆகவே மேற்கு வங்காளம் என்கிற பெயரை நமது வரலாற்று உண்மையின் அடிப்படையில் 'பங்களா' என்று மாற்ற வேண்டும் என்று அந்த தீர்மானம் கோரியது.

இந்த தீர்மானத்தை மத்திய மற்றும் மாநிலத்தில் உள்ள பிஜேபியினர் எதிர்த்தனர்.
கிட்டத்தட்ட மூன்று முறை தீர்மானமாக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பிய இந்த தீர்மானத்தை பிஜேபி அரசு தொடர்ந்து புறக்கணித்து வருகிறது.
அதனால்தான் நேற்று பாராளுமன்றத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சுகந்த சேகர் ராய் இடி முழக்கமாய் முழக்கமிட்டார் நாங்கள் திராவிடர்கள் என்று.
திராவிடம் என்பது இல்லாத ஒன்று என்றும், அது தமிழகத்தை தாண்டி எங்கே இருக்கிறது என்றும் கேட்டவர்களுக்கு இது சமர்ப்பணம்.
Kondal samy

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக