திங்கள், 24 ஜூன், 2019

பிரேமலதா கட்சி நிர்வாகிகளிடம் வசூல் வேட்டைக்கு தயார் .. கடனுக்கு வட்டி கட்டவாம்...

 கடனுக்கு,வட்டி கட்ட, நிதியுதவி, பிரேமலதா,திட்டம்,அம்பலம்
தினமலர் : கடனுக்கு வட்டி கட்ட,
தே.மு.தி.க., மாவட்ட செயலர்களிடம் நிதியுதவி கேட்க, விஜயகாந்த் மனைவி பிரேமலதா திட்டமிட்டுள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது. லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணி யில் இடம் பெற்ற, தே.மு.தி.க., நான்கு தொகுதி களில் போட்டியிட்டது. கள்ளக்குறிச்சியில் போட்டியிட்ட விஜயகாந்த் மைத்துனர் சுதீஷ் உட்பட 4 பேரும், படுதோல்வி அடைந்தனர்.
தேர்தல் நேரத்தில், செலவுக்கு பணம் இன்றி, தே.மு.தி.க., வேட்பாளர்கள் திணறினர். திருச்சியில் போட்டியிட்ட இளங்கோவன், வட சென்னையில் போட்டியிட்ட மோகன்ராஜ்
இருவரும், விஜயகாந்த், பிரேமலதா விடம் நேரில் முறையிட்டனர்.ஆனாலும், நிதி வழங்க, அவர்கள் மறுத்து விட்டனர்.
தேர்தலில் செலவு செய்யாத தால், கட்சி வேட்பாளர்கள் படு தோல்வி அடைந்து உள்ளதாமாவட்ட செயலர்கள் கூறி வருகின்றனர். கட்சியின் நடவடிக்கைகள் குறித்து, தங்கள் கோபத்தை வெளிப்படுத்த, அவர்கள் நேரம் பார்த்து காத்திருக்கின்றனர்.
இந்நிலையில், தே.மு.தி.க., மாவட்ட செயலர்கள் ஆலோசனை கூட்டம், சென்னை கோயம்பேடில் உள்ள, அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று நடக்கிறது. இந்த கூட்டத்தில், பிரச்னையை எழுப்ப, சில மாவட்ட செயலர்கள் திட்டமிட்டு உள்ளனர். ஏற்பாடுஅவர்களுக்கு, 'செக்' வைக்கும் வகையில், புதிய ஏற்பாட்டை, விஜயகாந்த் மனைவி பிரேமலதா செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து, தே.மு.தி.க., வட்டாரங்கள் கூறிய தாவது:வாங்கிய கடனை செலுத்தாததால், விஜயகாந்தின் வீடு, ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லுாரி ஆகியவற்றை ஏலம் விட, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதை சாக்காக வைத்து, இந்த கடனுக்கு வட்டி கட்ட, நிதியுதவி வழங்க வேண்டும் என, மாநில நிர்வாகிகள் வாயிலாக, மாவட்ட செயலர் களிடம் கேட்க, பிரேமலதா முடிவெடுத்து உள்ளார்.
மேலும், தேர்தல் நேரத்தில், கூட்டணி கட்சி களின் வேட்பாளர்கள், கொடுத்த பணத்தை செலவிடாமல் பதுக்கிய, மாவட்ட செயலர் களிடம் கேள்வி எழுப்பவும், மாநில நிர்வாகி களுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார். இதனால், தேர்தல் தோல்வி மற்றும் செலவு குறித்து, யாரும் வாய் திறக்க மாட்டார்கள் என, பிரேமல தா நம்புகிறார்.இவ்வாறு, தே.மு.தி.க., வட்டாரங்கள் கூறின.
- நமது நிருபர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக