திங்கள், 3 ஜூன், 2019

70 தொகுதிகளில் பதிவான அதிக வாக்கும் வெற்றி பெற்றவரின் வாக்கு வித்தியாசமும் ஒன்றே! .

Elango Kallanai : தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டு இரண்டு வாரங்கள் ஆன பின்னரும் இன்னும் அதிர்வில் இருந்து மீள முடியாமல் கட்சிகள் இருப்பதை உணர முடிகிறது.
தேர்தலுக்கு முன்னர் கிட்டத்தட்ட 19 இலட்சம் வாக்கு எந்திரங்கள் காணாமல் போனதாக ஃபரன்ட் லைன் உட்பட பல முக்கியமான பத்திரிக்கைகள் செய்தி வெளியிட்டன. இது தேர்தல் மோசடியாக இருக்காது எந்திரங்கள் வாங்கியதில் ஊழல் தான் என்று சொல்லி மூடிவிட்டார்கள். அடுத்து பீஹாரின் முசாபர் நகரில் ஒரு ஓட்டலில் ஆறு வாக்கு எந்திரங்கள் பிடிபட்டது. இது அதிகாரப் பூர்வமான வழக்கு.
இது தவிர சில இணையக் காணொளிகள் வாக்கு எந்திரங்களை குடோன்கள் மற்றும் பல குழந்தைகள் தலையில் வைத்து சுமப்பதைப் பார்க்க முடிந்தது.
தேர்தல் முடிந்து வாக்கு எந்திரங்கள் குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகள் எண்ணப்பட்ட வருவாய் வட்டத்தில் இருக்கும். ஆனால் தமிழ்நாடு உட்பட ஏழு மாநிலங்களின் வாக்கு எந்திரங்களை எண்ணிக்கை முடிந்த அடுத்த நாளே திரும்பப் பெறுகிறது.
பதிவான வாக்குகளுக்கும் எண்ணப்பட்ட வாக்குகளுக்கும் 378 தொகுதிகளில் அதிகம் காட்டுகிறது. இதில் 70 தொகுதிகளில் பதிவான அதிக வாக்கும் வெற்றி பெற்றவரின் வாக்கு வித்தியாசமும் ஒரே எண் தான்.
Quint இதழ் இது குறித்த புகாரை அனுப்பியவுடன் தேர்தல் ஆணையம் தேர்தல் முடிவுகளையே இணையத்தில் இருந்து தூக்கியுள்ளது

இன்று தேர்தல் ஆணையம் சில தவறுதலான பதிவு வாக்கு எண்ணிக்கைகள் இருக்கலாம் என்று சமாளிக்கிறது. Voterturnout என்கிற ஆப் தேர்தல் ஆணயத்தின் ஆப். அதில் தெளிவான பதிவு எண்ணிக்கை சதவீதம் வந்துள்ளது . இப்போது தரவுகளை அழிக்கும் வேலை தான் நடக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக