மாலைமலர் :
இலங்கை தொடர் குண்டு வெடிப்பு தொடர்பாக
கோவையை சேர்ந்த 6 பேருக்கு எதிராக தேசிய புலனாய்வு பிரிவு வழக்குப்பதிவு
செய்துள்ளது.
கோவை:
இலங்கை குண்டுவெடிப்பை தொடர்ந்து, இந்தியாவில் பயங்கரவாத செயல்கள் குறித்து தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கோவையில் உக்கடம், அன்புநகர், குனியமுத்தூர் உள்ளிட்ட 7 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் இன்று காலை திடீரென சோதனையில் ஈடுபட்டனர். உக்கடத்தில் அசாரூதீன், போத்தனூரில் சதாம், அக்ரம் ஜிந்தா உள்ளிட்டோரது வீடுகளில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளது. சந்தேகத்திற்கு இடமானவர்களிடம் விசாரணையும் மேற்கொள்ளப்பட்டது. இதில் 6 பேருக்கு எதிராக தேசிய புலனாய்வு பிரிவினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கோவையில் சோதனை மேற்கொண்ட போது 14 மொபைல் போன்கள், 29 சிம் கார்டுகள், 10 பென் டிரைவ்கள், 3 லேப் டாப்கள், 6 மெமரி கார்டுகள், 4 ஹார்ட்டிஸ்க், பிரசார துண்டு காகிதங்கள் மற்றும் பிற ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கோவை மற்றும்
கேரளாவில் ஐ.எஸ். ஆதரவாளர்களின் செயல்பாட்டை தேசிய புலனாய்வு பிரிவு
தொடர்ந்து கண்காணித்து வருகிறது. இலங்கை தாக்குதலை அடுத்து அதிரடி
சோதனையில் 6 பேருக்கு இலங்கை தாக்குதலில் தொடர்பு உள்ளது தெரிய வந்துள்ளது.
இவர்களை தேசிய புலனாய்வு பிரிவு விரைவில் காவலில் எடுத்து விசாரிக்கும் என
தெரிகிறது. மேலும் சிலருக்கு சம்மன் விடுக்கவும் திட்டமிட்டுள்ளது என
தகவல் வெளியாகியுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக