வெள்ளி, 28 ஜூன், 2019

பெங்களூருவில் அடுத்த 5 ஆண்டுகளுக்கு அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட தடை விதிக்க முடிவு

buildதினமணி :கடுமையான தண்ணீர் பஞ்சத்தை எதிர்கொண்டிருக்கும் பெங்களூருவில், அடுத்த 5 ஆண்டுகளுக்கு அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்ட தடை விதிக்க கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. இது குறித்து துணை முதல்வரும், பெங்களூரு மேம்பாட்டு அமைச்சருமான  ஜி. பரமேஸ்வரா கூறுகையில், அடுத்த 5 ஆண்டுகளுக்கு பெங்களூருவில் அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்ட தடை விதிப்பது என்று அரசு முடிவு செய்துள்ளது. தண்ணீர் பஞ்சம் என்ற பிரச்னை முடிவுக்கு வரும் வரை இந்த தடை உத்தரவை அமலில் வைத்திருக்க அரசு திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து இறுதி முடிவெடுக்கும் முன்பு, கட்டுமான நிறுவனங்கள் மற்றும் வீடு, மனை விற்பனையாளர்களுடன் ஆலோசனை நடத்தப்படும் என்றும் தெரிவித்தார்.

குடிநீர் இருக்கிறதா என்பதை ஆராயாமலேயே, கட்டுமான நிறுவனங்கள் அடுக்குமாடிக் குடியிருப்புகளைக் கட்டி முடித்து விடுகின்றன. வீடுகளை விற்கும் போது குடிநீருக்கு அவர்களால் உத்தரவாதம் அளிக்க முடியவில்லை. இதனால், அந்த அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வாழ்வோர், தண்ணீர் டேங்கர் லாரிகளை நம்பியே வாழ வேண்டியுள்ளது. இன்னும் 5 ஆண்டுகளில், பெங்களூருவுக்கு ஷராவதி, லிங்கனமக்கி போன்ற நீர் ஆதாரங்களில் இருந்து தண்ணீர் பெறப்படும். அதன் பிறகு தண்ணீர் பஞ்சம் ஏற்படாது என்றும் பரமேஸ்வரா தெரிவித்துள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக