ஞாயிறு, 30 ஜூன், 2019

ஸ்டாலின் : விரைவில் அதிமுக ஆட்சி கவிழப்போவது உறுதி. 47 நிமிடங்கள் அசத்தல் உரை ....


மாலைமலர் :திமுகவை எந்த சக்தியாலும் அழிக்க முடியாது, அழிக்க நினைத்தவர்கள் அழிந்து போவார்கள் - மு.க.ஸ்டாலின் முக ஸ்டாலின்
கடலுார் மாவட்டம் மஞ்சக்குப்பம் மைதானத்தில் தி.மு.க. கூட்டணி சார்பில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிப்பு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது; தி.மு.க., கூட்டணி அரசியல் லாபத்திற்காக அமைந்தது அல்ல. கொள்கைக்காக அமைந்த கூட்டணி. விரைவில் அதிமுக ஆட்சி கவிழப்போவது உறுதி. தி.மு.க.வை எந்த சக்தியாலும் அழிக்க முடியாது. அழிக்க நினைத்தவர்கள்தான் அழிந்து போவார்கள். பாராளுமன்றத்தில் தமிழ் ஒலித்தது மிகப்பெரிய சாதனை, இனி ஒவ்வொரு நாளும் தமிழ் ஒலிக்கும். தமிழக மக்களின் வழக்கறிஞர்களாக தி.மு.க. எம்.பிக்கள் உள்ளனர். ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடாவிட்டால் விவசாயிகளை திரட்டி மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும். தண்ணீர் பஞ்சம் இல்லை என்றால், ஜோலார்பேட்டையில் இருந்து ஏன் தண்ணீர் எடுத்துவர வேண்டும்? என கேள்வி எழுப்பினார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக