சனி, 22 ஜூன், 2019

கேரளாவில் இருந்து அவுஸ்திரேலியாவுக்கு சென்ற 243 பேர் கதி என்னவானது?

  தினமலர் :புதுடில்லி: கேரளாவிலிருந்து ஐந்து மாதங்களுக்கு முன் புறப்பட்ட கப்பல், மாயமான தகவல் வெளியாகியுள்ளது. இந்த கப்பலில் இருந்த, 243 பேர் கதி என்னவானது என, தெரியவில்லை.
கேரள மாநிலம், எர்ணாகுளம் துறைமுகத்திலிருந்து, தேவமாதா என்ற கப்பல், ஜனவரியில், பசிபிக் பிராந்திய நாடுகளுக்கு புறப்பட்டுச் சென்றது. இந்த கப்பலில், 243 பேர் இருந்தனர். கப்பல் புறப்பட்டு ஐந்து மாதத்துக்கு மேலாகியும், சம்பந்தபட்ட இடத்துக்கு, சென்று சேரவில்லை என, தகவல் வெளியாகியுள்ளது. அந்த கப்பலில் இருந்து, எந்த தகவலும் இல்லை. கப்பல் கேப்டன், ஊழியர்கள், அதில் பயணித்தவர்களையும் தொடர்பு கொள்ள முடியவில்லை.< இது குறித்து, வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர், ரவீஸ் குமார் கூறுகையில், ''கப்பல் மாயமானது குறித்து, பசிபிக் பிராந்திய நாடுகளுக்கு தகவல் கொடுத்துள்ளோம். ஆனால், எந்த நாடுகளிடமிருந்தும், இதுவரை தகவல் வரவில்லை,'' என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக