tamil.oneindia.com - hemavandhana.: கரும்பு தோட்டத்தில் நாசமாக்கப்பட்ட பெண்கள், ஆபாச வீடியோக்கள் சிக்கின கள்ளக்குறிச்சி: கரும்பு தோட்டத்தில் பெண்களை மிரட்டி நாசம் செய்திருக்கிறார்கள் கேடுகெட்ட பாவிகள்.. இதில் 100-க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்கள் சிக்கி உள்ளதாக கூறப்படுகிறது.
பொள்ளாச்சி சம்பவத்துல நூற்றுக்கணக்கான ஆபாச வீடியோக்கள் சிக்கியதாக கூறப்பட்டது. ஆனால் அவையெல்லாம் எங்கே போயின, யாரிடம் சிக்கி உள்ளது, என்பதெல்லாம் வெளி உலகுக்கு தெரியாமலேயே போய்விட்டது.
இந்த விஷயத்துல கறார் தன்மையை உடனுக்குடனேயே வெளிப்படுத்தி இருந்தால் இன்னைக்கு இன்னொரு அக்கிரமம் நடந்திருக்காது. இந்த சம்பவம் கள்ளக்குறிச்சியில் நடந்துள்ளது. பாலியல் தொந்தரவு< அரசு கல்லூரியில் பிஎஸ்சி 2ம் ஆண்டு படிக்கும் மாணவிக்கு இந்த கும்பலில் உள்ள 2 பேர் வலை விரித்துள்ளனர். அவர்கள் பெயர் பைனான்சியர் ராஜா, அவரது நண்பர் வேலுமணி. செல்போனில் ஆபாசமாக படம் எடுத்து வைத்துக் கொண்டு, இந்த பெண் பின்னாடியே போவதும், அசிங்கமாக பேசுவது என தொந்தரவு மேல் தொந்தரவு செய்து வந்திருக்கிறார்கள். ஒருகட்டத்தில் பயந்துபோன மாணவி வீட்டில் விஷயத்தை சொல்ல, அந்த பெண்ணின் பெற்றோர் கள்ளக்குறிச்சி போலீசில் புகார் சொன்னார். போலீசாரும், சம்பந்தப்பட்ட ராஜா, வேலுமணியை கைது செய்துவிட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையின் போதுதான் பல திடுக் தகவல்கள் தெரியவந்துள்ளன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக