tamil.oneindia.com - lakshmi-priya.:
தூத்துக்குடி:
பணப்பட்டுவாடா புகாரை அடுத்து தூத்துக்குடியில் திமுக தலைவர்
மு.க.ஸ்டாலின் தங்கவிருந்த விடுதியில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை
நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடியில் ஒட்டப்பிடாரம் சட்டசபை தொகுதி திமுக வேட்பாளர் சண்முகையாவை ஆதரித்து இன்று ஸ்டாலின் பிரசாரம் செய்யவிருந்தார். இதற்காக சென்னையிலிருந்து விமானம் மூலம் தூத்துக்குடி சென்றார். அங்கு அவர் தங்குவதற்காக கோரம்பள்ளத்தில் உள்ள சத்யா ரிசார்ட்டில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இந்த நிலையில் தூத்துக்குடியில் முக ஸ்டாலின் தங்க உள்ள விடுதியில் பறக்கும் படையினர் சோதனை நடத்தினர்.
3-வது அணிக்கான கதவை இழுத்து மூடினார் மு.க.ஸ்டாலின்!
பணப்பட்டுவாடா புகாரால் விடுதியில் உள்ள அரசியல் பிரமுகர்களின் வாகனங்களையும் அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். தேர்தல் நடத்தை விதிகள் வரும் 27-ஆம் தேதி வரை அமலில் உள்ளதாக தமிழக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் வரும் 19-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுவதால் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் அதிரடி சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். லோக்சபா தேர்தலுக்கு முன்பு, திமுக பொருளாளர் துரைமுருகன் வீடு, அனிதா ராதாகிருஷ்ணன் வீடு, தூத்துக்குடியில் கனிமொழி தங்கியிருந்த வீடு ஆகியவற்றில் சோதனை நடந்தது குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக