வியாழன், 30 மே, 2019

மம்தா பானர்ஜி..மோடி பதவி ஏற்புவிழவை புறக்கணித்த காரணம் என்ன?

Sorry Modi ji... Mamata Banerjee decides not to attend PM swearingtamil.asianetnews.com - vinoth-kumar: நாளை பிரதமராக மோடி பதவியேற்கும் நிகழ்ச்சியில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் கேரள முதல்வர் பினராயி விஜயன் ஆகியோர் பங்கேற்கபோதில்லை என்று அறிவித்துள்ளனர். நாளை பிரதமராக மோடி பதவியேற்கும் நிகழ்ச்சியில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் கேரள முதல்வர் பினராயி விஜயன் ஆகியோர் பங்கேற்கபோதில்லை என்று அறிவித்துள்ளனர்.
மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணி 352 தொகுதிகளை கைப்பற்றியது. பாஜக மட்டும் 302 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கிறது. நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக பதவியேற்க உள்ளார். வரும் 30-ம் தேதி குடியரசுத் தலைவர் மாளிகையில் பதவியேற்பு விழா நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது.

மோடி பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ளும்படி பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும் பல்வேறு மாநில முதல்வருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மக்களவை தேர்தல் களத்தில் மோடியும் மம்தாவும் மோதிக்கொண்ட நிலையில், மோடியின் பதவியேற்பு விழாவில் மம்தா பங்கேற்க உள்ளதாக செய்திகள் வெளியாகின.
இந்நிலையில் மம்தா பானர்ஜி கலந்து கொள்வது குறித்து பாஜக எம்.பி. அர்ஜூன் கூறுகையில், தனது உறவினரை காப்பாற்றவே மம்தா டெல்லி செல்வதாக கூறினார். மேலும், மோடி பதவியேற்பு விழாவில், மேற்கு வங்கத்தில் நடந்த அரசியல் வன்முறையில் கொல்லப்பட்ட 54  பாஜக, தொண்டர்களின் குடும்பத்தினரை, கட்சி மேலிடம் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து மோடி பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள மாட்டேன் என மம்தா பானர்ஜி அதிரடியாக அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட டுவிட்டர் பக்கத்தில் மேற்கு வங்கத்தில் நடந்த அரசியல் வன்முறையில் 54 பேர் கொல்லப்பட்டதாக பாஜக கூறுவதில் உண்மையில்லை. அவர்கள் அரசியல் ரீதியாக கொல்லப்படவில்லை தனிப்பட்ட காரணங்களுக்காகவும், குடும்ப பிரச்சனை காரணமாக அவர்கள் கொல்லப்பட்டனர். இதுபோல தவறான தகவல்களை பாஜக பரப்பிவருவதால் பதவியேற்பு விழாவில் பங்கேற்கவில்லை என்று அறிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக