செவ்வாய், 21 மே, 2019

காங்கிரஸ் மீதான வழக்கை அனில் அம்பானி திரும்ப பெற்றார் ..

திடீர் திருப்பம்!! ரபேல் விவகாரத்தில் காங்., மீதான வழக்கை திரும்பப் பெற்ற அனில் அம்பானிtamil.cdn.zeenews.com/tamil : டெல்லி: ரபேல் வழக்கில் காங்கிரஸ் மீது ரூ.5000 கோடி நஷ்ட ஈடு கேட்டு தொடுத்து இருந்த அவதூறு வழக்கை அனில் அம்பானி வாபஸ் பெற்றார்.
கடந்த 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் 23 ஆம் தேதி பிரான்சிடம் இருந்து, ரஃபேல் போர் விமானங்களை வாங்க, ரூ. 58 ஆயிரம் கோடி மதிப்பில் 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு மத்திய அரசு ஒப்பந்தம் செய்தது. இந்த கொள்முதல் ஒப்பந்தத்தில் பெரிய அளவில் முறைகேடுகள் நடந்திருப்பதாக காங்கிரஸ் கட்சியினர் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தனர்.
ரபேல் முறைகேடுகள் தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து, ரஃபேல் ஒப்பந்தம் மிகச்சரியானது என உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு ஆதரவாக தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. சீராய்வு மனுக்களை ஏற்ற உச்சநீதிமன்றம் விசாரித்து வந்தது. இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்துள்ளது.
ரஃபேல் போர் விமானங்கள் வாங்கியத்தில் நடைபெற்ற முறைகேட்டில் ரிலையன்ஸ் நிறுவன தலைவர் அனில் அம்பானிக்கும் தொடர்பு இருப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேரடியாக குற்றஞ்சாட்டி இருந்தார். மேலும் காங்கிரஸ் கட்சிக்கு சொந்தமான ஹெரால்ட் பத்திரிக்கை ரபேல் ஒப்பந்த்தில் அனில் அம்பானியின் முறைகேடு குறித்து கட்டுரையை வெளியிட்டிருந்தது. இது பெரும் விவாததுக்கு உள்ளானது.
ஆனால் ஹெரால்ட் பத்திரிக்கை வெளியிட்டுள்ள செய்தி உண்மை இல்லை என்றும், அது முற்றிலும் தவறு எனக்கூறிய அனில் அம்பானி, அகமதாபாத் நீதிமன்றத்தில் 5 ஆயிரம் கோடி நஷ்ட ஈடு கேட்டு ராகுல் மற்றும் ஹெரால்ட் பத்திரிக்கைக்கு எதிராக அவதூறு வழக்கு தொடர்ந்தார்.
ஆனால் மக்களை தேர்தல் முடிவுகள் நாளை மறுநாள் வெளியாக உள்ள நிலையில், திடீர் திருப்பமாக ராகுல் மற்றும் ஹெரால்ட் பத்திரிக்கைக்கு எதிராக அவதூறு வழக்கு திரும்ப பெற்றார் அனில் அம்பானி. இது பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தி உள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக