Shahjahan R : மோடி குகையில் தியானம் செய்வது அவருடைய இறை நம்பிக்கை. அதை நாம் கேள்வி கேட்கலாமா?
நிச்சயமாக கேட்கக்கூடாது.
எவருடைய இறைநம்பிக்கையையும் கேலிக்கு / கேள்விக்கு உள்ளாக்கக்கூடாது. இதில் நான் எப்போதும் உறுதியாக இருக்கிறேன். இப்போது நடந்து கொண்டிருப்பதற்கும் இறை நம்பிக்கைக்கும் எந்த தொடர்பும் கிடையாது.
கடைசிகட்டத் தேர்தல் நாளை நடைபெற இருக்கிறது. தேர்தல் விதிகளின்படி பிரச்சாரம் நேற்றுடன் முடிந்து விட்டிருக்க வேண்டும். முடிந்து விட்டது.
நாளை தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் மோடி போட்டியிடும் வாரணாசியும் ஒன்று.
இப்போது காவி உடை அணிந்து கொண்டு தியானம் செய்யப்போவதாக ஒரு போட்டோஷூட் நாடகம்தான் நடத்தப்பட்டுள்ளது முற்றிலும் விளம்பர நோக்கம்தான். மறைமுகப் பிரச்சாரம்தான்.
உண்மையிலேயே தியானம் செய்யப்போகிறவராக இருந்தால் அமைதியாக விளம்பரம் தேடாமல் செய்திருப்பார். ஆனால் இவர் செய்தது?
முதலில் வந்தது போட்டோ.
போட்டோ வேண்டாம் என்றாராம், பத்திரிகையாளர்கள் கேட்டதால் சரி ஒரு போட்டோ எடுத்துக்கொள்ளுங்கள் என்றாராம். இப்படித்தான் ஆரம்ப செய்திகள்.
ஏதோ பழங்கால குகையில் துறவிகள் போல தியானம் செய்யப்போகிறார் என்பது போன்ற பில்டப்.
அப்புறம் வந்தது வீடியோ
போட்டோவில் ஏதோ மிகச்சிறிய குகை போலக் காட்டப்பட்டது உண்மையில் வசதியான தங்கும் அறை என்பது வெட்ட வெளிச்சமானது.
கார்ப்பெட் விரிக்கப்பட்டுள்ளது. கட்டில் மெத்தை, தலையணை வசதி இருக்கிறது. வசதியான கழிப்பறை வசதிகளுடன், 24 மணி நேர மின்சார வசதியுடன் இருக்கிற நவீன “குகை” உண்மையில் ஒரு சுற்றுலா விடுதி போலத்தான்.
மோடிக்கு எதிர்புறமாக நின்று, பின்புறமாக நின்று, அந்தப்பக்கம் திரும்புங்கள், இந்தப்பக்கம் திரும்புங்கள், கும்பிடுங்கள்... என்றெல்லாம் டைரக்சன் செய்தது போல வீடியோ ஷூட் நடத்தப்பட்டிருக்கிறது. அல்லது இப்படியெல்லாம் எடுங்கள் என்று அவரே டைரக்சன் செய்திருக்கிறார்.
முதலில் வந்த செய்திகளில் No media will be allowed in the vicinity of the cave.
மீடியா அந்தப் பகுதிக்கே அனுமதிக்கப்படவில்லையாம்.
ஆனால் குகைக்கு உள்ளேயே வெகு நேரத்துக்கு வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. இந்தி செய்தி ஊடகங்களில் தொடர்ந்து ஓடிக் கொண்டிருக்கிறது.
இது மகா மட்டமான விளம்பர யுக்தி.
எந்தவித கூச்சமும் இல்லாத, ஓட்டு வேட்டை நாடகம்.
தேர்தல் விதிமுறைகளை மதிப்பதில் முன் உதாரணமாக இருக்க வேண்டிய பிரதமர், எவ்வளவு மோசமான விளம்பர நாடகம் நடத்திக் கொண்டிருக்கிறார் என்பதைத்தான் நாங்கள் சுட்டிக்காட்டுகிறோம்.
- Shahjahan R

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக