Shyamsundar tamiloneindia :
டெல்லி: திமுக தலைவர் ஸ்டாலினை இன்னும் சில நாட்களில் தெலுங்கானா முதல்வர்
சந்திரசேகர ராவ் சந்திக்க உள்ளார்.
இந்த சந்திப்பிற்கு பின் பாஜக இருப்பதாக நிறைய செய்திகள் வெளியாகி வருகிறது.
தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் மூன்றாவது அணி அமைக்கும் முடிவோடு தற்போது தென்னிந்திய அரசியல் தலைவர்களை சந்தித்து வருகிறார்.
லோக்சபா தேர்தல் இன்னும் சில நாட்களில் முடிய உள்ளது. தேர்தல் இறுதி கட்டத்தை நெருங்கிவிட்டது. இன்று ஐந்தாம் கட்ட லோக்சபா தேர்தல் நடந்து வருகிறது. இந்த நிலையில்தான் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் முக்கியமான பிளான் ஒன்றுடன் அரசியல் தலைவர்களை சந்தித்து வருகிறார்.
கேரள முதல்வர் பினராயி விஜயனை இன்று தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் சந்திக்க உள்ளார். லோக்சபா தேர்தல் முடிவுகள் குறித்தும், தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி குறித்தும் இவர்கள் ஆலோசிக்க இருப்பதாக செய்திகள் வருகிறது. இன்று மாலை இந்த சந்திப்பு நடக்கிறது.
அதேபோல் கர்நாடக முதல்வர் குமாரசாமியுடன் அவர் இன்று காலை போனில் பேசினார். சந்திரசேகர ராவ் மற்றும் குமாரசாமி இருவரும் சுமார் 1 மணி நேரம் போனில் பேசி இருக்கிறார்கள்.
தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி குறித்து இவர்கள் இருவரும் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.
இதற்கு அடுத்தபடியாக திமுக தலைவர் ஸ்டாலினை இன்னும் சில நாட்களில் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் சந்திக்க உள்ளார். மே 13ம் தேதி இதற்காக தேதி குறிக்கப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் கூட்டணி குறித்து பேசுவார்கள் என்று தெரிகிறது. வேறு ஒரு பக்கம் ஆந்திர பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு கூட்டணி குறித்து பேசி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மத்தியில் காங்கிரஸ், பாஜக அல்லாத ஆட்சியை உருவாக்க இவர் திட்டமிட்டு இருப்பதாக செய்திகள் வருகிறது. ஏற்கனவே தேர்தலுக்கு முன்பே காங்கிரஸ், பாஜக அல்லாத கூட்டணியை உருவாக்க, சந்திரசேகர ராவ் முயன்றார். அதனால்தான் இப்போது இவர் எல்லோரையும் சந்தித்து பேசி வருகிறார் என்று கூறுகிறார்கள்.
ஆனால் வருக்கு பின் பாஜக இருப்பதாகவும் கூறுகிறார்கள். இவர் சந்திக்கும் தலைவர்கள் எல்லாம் பாஜக கட்சியினர் சந்திக்க விரும்பாத தலைவர்கள். அதனால் சந்திரசேகர ராவ் மூலம் பாஜக தூது அனுப்புகிறது. பாஜக அனுப்பிய தூதின் அடிப்படையில்தான் சந்திரசேகர ராவ் ஸ்டாலினை சந்திக்க உள்ளார் என்கிறார்கள். தேர்தலுக்கு பின் கூட்டணி அமைக்கவே இந்த தூது என்று கூறுகிறார்கள்
amil.oneindia.com/

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக