ஞாயிறு, 26 மே, 2019

ராஜினாமா செய்கிறாரா மம்தா பானர்ஜி ? அதிர்ச்சியில் திரிணாமூல் காங்கிரஸ் தொண்டர்கள்

tamil.asianetnews.com :
mamtha banerji will resign
மேற்கு வங்க முதலமைச்சர்  மம்தா பானர்ஜி, முதலமைச்சராக  நீடிக்க விரும்பவில்லை  என்றும் ராஜினாமா செய்யப் போவதாகவும் தொண்டர்களிடம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன மக்களவைத் தேர்தலில் ஆளும் பாஜக மீண்டும் ஆட்சியை தக்கவைத்துள்ளது. மேற்கு வங்கத்தைப் பொறுத்தவரை மொத்தமுள்ள 42 மக்களவைத் தொகுதிகளில் பாஜக 18 தொகுதிகளிலும், திருணமூல் காங்கிரஸ் 22 இடங்களிலும் வெற்றி பெற்றது. கடந்த 2014 தேர்தலில் பாஜக 2 இடங்களில் மட்டுமே வென்ற நிலையில் இந்த தேர்தலில் 18 தொகுதிகளை கைப்பற்றியது திருணமூல் காங்கிரஸ் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் இன்று திரிணாமூல் காங்கிரஸ், தேர்தல் முடிவு தொடர்பாக அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.  இதைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த மம்தா பானர்ஜி, ”மத்திய படைகள் எங்களுக்கு எதிராகச் செயலாற்றின. அதனால் நெருக்கடி நிலை உருவாக்கப்பட்டது. இந்து - முஸ்லிம் பிரிவினை ஏற்பட்டது. அதனால் ஓட்டுகள் பிரிந்தன. தேர்தல் ஆணையத்திடம் இதுகுறித்து புகார் அளிக்கப்பட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை” என்று குற்றம்சாட்டினார்.

”பாஜகவின் இந்த வெற்றியை ஏற்றுக் கொள்ள முடியாது. ராஜஸ்தான், ஹரியானா, குஜராத் ஆகிய மாநிலங்களில் பாஜக எப்படி இத்தனை இடங்களில் வெற்றி பெற்றது. இதைக் கேட்க மக்கள் பயப்படுகிறார்கள். ஆனால் எனக்குப் பயமில்லை” என்றார்.

கடந்த 6 மாதங்களாக என்னால் பணியாற்ற முடியவில்லை அதிகாரமற்ற முதல்வராக உள்ளேன். இன்று நடைபெற்ற கூட்டத்தில் , நான் முதல்வராக இனியும் தொடர விரும்பவில்லை என்று கட்சியினரிடம் கூறினேன். இந்த நாற்காலி எனக்கானது அல்ல. கட்சிதான் எனக்கு மிகவும் முக்கியம். நான் பதவி விலகுவேன் என்று சொன்னேன். ஆனால் கட்சியினர் இதை நிராகரித்துவிட்டனர் என்று மம்தா பானர்ஜி. கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக