வியாழன், 30 மே, 2019

தமிழ்நாட்டிற்கு காவிரியில் 9.2 டிஎம்சி நீர்! – காவிரி மேலாண்மை வாரியம் உத்தரவு!

aanthaireporter.com :  தமிழ்நாட்டிற்கு ஜூன் மாதத்துக்குரிய 9.2 டிஎம்சி தண்ணீரை காவிரியில் இம்மாத இறுதிக்குள் திறந்து விட வேண்டும் என காவிரி மேலாண்மை ஆணையம் இன்றைய உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மழை கைவிட்டதால் தமிழக விவசாயிகள் அதிக எதிர்பார்ப்புக்கிடையே காவிரி மேலாண்மை ஆணையத்தின் 3-வது கூட்டம் டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் மசூத் உசைன் தலைமையில் தொடங்கியது. ஆணைய கூட்டத்தில் தமிழக, கர்நாடக பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
அதை ஒட்டி மே மாதம் முடிவதற்குள் காவிரியில் 9.2 டிஎம்சி நீரை கர்நாடகா வழங்க உத்தரவிட வேண்டும் என தமிழக அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. அதே சமயம் மேகதாது அணை திட்டம் குறித்த வழக்கு நிலுவையில் உள்ளதால் அதுகுறித்து விவாதிக்க கூடாது. மேகதாது குறித்து இனிவரும் கூட்டங்களிலும் விவாதிக்க கூடாது என கோரிக்கை வைக்கப்பட்டது.

இதனிடையே குறுவை சாகுபடிக்கு ஏதுவாக கர்நாடகம் ஜூன் மாதத்தில் 9.2 டிஎம்சி நீரை திறந்துவிட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது. காவிரி மேலாண்மை ஆணையத்தின் செயல்பாடு சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை மீறுவதாக உள்ளது என தமிழகம் சார்பில் வாதிடப்பட்டது. இதை ஏற்று கொண்டு மேகதாது குறித்து எந்த விவாதமும் மேற்கொள்ளப்படவில்லை
இதை விசாரித்து ஜூன் மாதத்திற்கான 9.2 டிஎம்சி காவிரி நீரை திறந்து விட கர்நாடகத்திற்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டு உள்ளது.
காவிரி மேலாண்மை கூட்டம் முடிந்ததும் நாகை தொகுதி எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டுள்ள செல்வராசு, மத்திய நீர்வளத் துறை அமைச்சக அலுவலகத்தில் மசூத் உசேனை சந்தித்து பேசினார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக