Sharmila Seyyid :
இலங்கை
வெடிகுண்டு தாக்குதல்களுக்கு ISIS இயக்கம் உரிமை கோரியுள்ளது. அமெரிக்கா
இலங்கைக்குள் நுழைவதற்கு இதொரு துருப்புச் ்கா அறிவித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
சீட்டு. ISIS இயக்கத்திற்கு எதிரான யுத்தம் என்ற போர்வையில் மத்திய கிழக்கை ஆக்கிரமித்திருக்கும் அமெரிக்கா, தெற்காசியாவில் தனது வலிமையை கிளை பரப்ப ISIS இயக்கத்தின் இந்த அறிவிப்பு ஒரு சந்தர்ப்பத்தைத் திறந்துவிட்டுள்ளது. ஏற்கனவே புலனாய்வுக்காக இன்டர்பொல் இலங்கைக்கு வருவதாக அறிவித்தாயிற்று. இலங்கையில் ISIS இயக்க செயற்பாடுகளை முடக்க கேந்திரம் அமைக்கப் போவதாக அமெரிக

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை 99 ஆண்டுகள் குத்தகைக்கு எடுத்துள்ளதுடன்,
இலங்கையின் பல இடங்களில் கிளை பரப்பி இருக்கும் சீனா அமெரிக்கத் தலையீட்டை
விரும்பாது. இந்தியா அமெரிக்காவை ஆதரிக்கும். இந்திய வெளியுறவுக்
கொள்கையில் விரைவில் மாற்றம் வருவதற்கும் இடமுள்ளது.
முஸ்லிம்களைக் கொண்டே முஸ்லிம்களை அழிக்கும் இந்த சதிகளுக்குப் பின்னால் துணை நிற்கச் செய்வதற்குப் பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டாலும் பிரதான காரணம் மத வெறியே. மதத்திற்கான மரணம் சுவர்க்கம் சேர்க்கும் என்ற நம்பிக்கையையே இந்த தீயசக்திகள் பயன்படுத்துகின்றன.
சகல நோய்களுக்கும் நிவாரணி என்று ஏதோவொரு மருந்தை விளம்பரம் செய்யும் வணிக நிறுவனம்போல எம் எல்லா குறைபாடுகளையும் போதாமைகளையும் அமெரிக்காவின் தலையில் அரசாங்கத்தின் தலையில் சுமத்திவிட்டு ஒதுங்கிவிடுவதற்கான சந்தர்ப்பமல்ல இது. நம்மை நாமே சுயபரிசோதனை செய்து கொள்வோம். இதற்காக நாம் காட்டிக் கொடுப்பாளர்களாக மாற வேண்டியதில்லை. இத்தனை காலமும் உங்களுக்குள்ளும் மத தீவிரவாதம் இருந்த(து)தா என்பதை நீங்களே உய்த்துணருங்கள். தற்காப்புக்காக நல்லவர்கள் வேசம் போட்டு உங்களையே ஏமாற்றிக் கொள்ளாமல் சுயபரிசோதனை செய்யுங்கள். தொலைத்தவற்றை தனியாகத் தேடிக் கண்டடைவது சாத்தியமில்லை. இன்றைய சூழலில் அவசர அவசரமாக நீங்கள் எழுதித் தள்ளும் உங்கள் வாக்குமூலங்களில் உண்மையில்லை. அவற்றில் அச்சமும் பீதியும் வழிகிறது. குறைந்தபட்ச கௌரவங்களோடு உயிர் வாழ்ந்துவிடவாவது அனுமதிக்கப்படவேண்டும் என்ற அங்கலாய்ப்பு மட்டுமே மேலோங்கி இருக்கிறது.
மேலைத்தேய நாடுகளில் தஞ்சம் கோரி வாழும் இலங்கை மேட்டுக்குடி முஸ்லிம்கள் சிலரும் செங்கன் வீசாவில் சென்று ஐரோப்பாவில் முகவரியில்லாமல் வாழும் முஸ்லிம்கள் சிலரும் மத்திய கிழக்கில் அன்றாடங்காய்ச்சிகளாக வாழும் சிலரும் தரும் மந்திராலோசனைகளால் விடிவு வரும் என கனவு காணாதீர்கள். அவர்களது முட்டுக் கொடுத்தல்கள் அங்கே அவர்களது அகதி அந்தஸ்த்துகளை உறுதி செய்வதற்கும் தான். மதவெறி அடையாளங்களைத் தூக்கிப் பிடிக்கச் சொல்லும் புத்திமதிகளோடு வரும் அவர்களது அரசியலில் வீழ்ந்திடாருப்பதும் தேவை. நிதானமாக உங்களோடு உண்மையாக இருப்பவர்களோடு ஒன்றுபடுங்கள். நம் எதிர்கால சந்ததிகளுக்குப் பாதுகாப்பான கௌரவமான வாழ்வை அமைத்துத் தர உறுதி கொண்டு செயற்படுவோம். யாராலும் விலைபேச முடியாத யாருக்கும் விலைபோகாத தெளிவு கொண்டு மதவெறியிலிருந்து ஒவ்வொரு மனிதனும் தன்னை மீட்டாலே போதும் தீவிரவாதம் கண்களில் தூசியாய் விழுந்து உறுத்தாது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக