சனி, 20 ஏப்ரல், 2019

பொன்னமராவதியில் ஒரு சமுகத்தை இழிவு படுத்துவாக வீடியோ .. வன்முறையில் ஈடுபட்டனர்.


Samayam Tamil வெளியான சர்ச்சை ஆடியோ - வெடித்தது வன்முறை; புதுக்கோட்டை கிராமத்தில் நடந்தது என்... ஒரு குறிப்பிட்ட சமூகத்தை இழிவுபடுத்தும் ஆடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இதனால் புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் வன்முறை தீ பற்றியுள்ளது. இதனைக் கண்டிக்கும் வகையில் பொதுமக்கள் போலீசார் மீது கற்களை வீசி எறிந்தனர். மேலும் அரசுப் பேருந்துகள் மற்றும் போலீஸ் வாகனங்களை தாக்கினர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, பொன்னமராவதி தாலுகாவில் பதற்றத்தை தணிக்கும் வகையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முன்னதாக 5,000க்கும் மேற்பட்டோர் உள்ளூர் போலீஸ் ஸ்டேஷன் முன்பு திரண்டனர். சர்ச்சைக்குரிய வகையில் ஆடியோ வெளியிட்ட நபர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினர்.


இதையடுத்து சாலையோரம் நின்று கொண்டிருந்த வாகனங்களை அடித்து நொறுக்கினர். இந்த சம்பவத்தை அடுத்து, போலீஸ் எஸ்.பி செல்வராஜ் நிலைமையை கட்டுக்குள் வந்தனர். பொதுமக்கள் மீது தடியடி நடத்தப்பட்டது.

இந்நிலையில் ஆடியோ விவகாரம் மற்றும் வன்முறை குறித்த செய்தி பரவியதால், மீண்டும் பதற்றம் தொற்றிக் கொண்டது. புதுக்கோட்டை - பொன்னமராவதி சாலையில் மரங்களை சாய்த்து, மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து மத்திய மண்டல ஐஜி வரதராஜூ கூறுகையில், நிலைமை தற்போது கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. நாங்கள் தீவிரமாக கண்காணித்து வருகிறோம்.

வன்முறையில் ஈடுபட்டவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளோம். ஆடியோவை வெளியிட்டவர்கள் யார் என்று தெரியவில்லை. விசாரித்து வருகிறோம். திருச்சி சரக துணை ஐஜி லலித லட்சுமி சம்பவ இடத்தில் முகாமிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக