வெள்ளி, 5 ஏப்ரல், 2019

நண்பர்கள் முன் ஆட மறுத்த மனைவியின் ஆடையை கலைத்து மானபங்கம் செய்த கணவர்!!


நண்பர்கள் முன் ஆட மறுத்த மனைவியின் ஆடையை கலைத்து மானபங்கம் செய்த கணவர்!!zeenews.india.com : நண்பர்கள் முன் ஆட மறுத்த மனைவியின் தலையை மொட்டையடித்து சித்தரவதை செய்த கணவன்!!
இந்த பரந்த உலகை சுற்றி எத்தையோ விசித்திறான நிகழ்வுகள் நடக்கின்றனர். அவைகளில் சில சம்வம் நம்மை அதிர்ச்சியில் ஆழ்த்தும், சிலை நகைச்சுவையிலும் ஆழ்த்தும். இந்நிலையில், தனது நண்பர்கள் முன்னால் நடனம் ஆட மறுத்ததால் மனைவியின் தலையை மொட்டையடித்து சித்தரவதை செய்த கொடூர சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்த சம்பவம், பாகிஸ்தானின் லாகூர் நகரில் நடந்துள்ளது. பாகிஸ்தான் லாகூரை சேர்ந்த பெண் அஸ்மா ஆஸிஸ்-க்கும், மியான் பைசல்-க்கும் கடந்த சில அவருடங்களுக்கு முன் திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில், சில நாட்களுக்கு முன் ஆஸிஸ் பரபரப்பு வீடியோ ஒன்றை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.

அந்த வீடியோ பதிவில் அந்த பெண் மொட்டையடிக்கப்பட்ட  தலையுடனும், களையிழந்த முகத்துடனும் பரிதாபமாக பேசியுள்ளார். அதில், கணவர் மற்றும் அவரது நண்பர்களின் முன்னிலையில் நடனம் ஆட மறுத்ததற்காக தன்னை கணவர் துன்புறுத்தியதாக வீடியோவில் ஆஸிஸ் தெரிவித்துள்ளார். மேலும், அவர் என்னுடைய ஆடைகளை வீட்டு பணியாளர் முன் அகற்றி, அவரைக்கொண்டு என்னை பிடிக்கவைத்து தலை முடியை ஷேவ் செய்து பின்னர் அதை தீயிட்டு கொழுத்தியதாக கணவர் மீது ஆஸிஸ் புகார் தெரிவித்துள்ளார்.
இது குறித்து காவல்துறையில் புகாரளித்தும் போலீசார் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என்று அவர் கூறியது சமூக ஊடகங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, ஆஸிஸின் கணவர் மற்றும் வீட்டு பணியாளர் கைது செய்யப்பட்டனர். இருப்பினும், அவர்  மீதான குற்றச்சாட்டை பைசல் முழுமையாக மறுத்துள்ளார். பொய்யான சூழலை உருவாக்கி அதனை பயன்படுத்தி தன்னை சிக்க வைத்துள்ளதாக பைசல் கூறியுள்ளார். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக