வெள்ளி, 19 ஏப்ரல், 2019

சிதம்பரம் பொன்பரப்பியில் விசிக ஆதரவாளர்கள் மீது பாமக ஜாதிவெறி தாக்குதல் பல வீடுகள் சேதம் .. வீடியோ


tamil.indianexpress.com :சிதம்பரம் தொகுதியில் உள்ள அரியலூரில் உள்ள பொன்பரப்பி கிராமத்தில் இருதரப்பினர் இடையே நடந்த மோதலில் 20-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம் அடைந்துள்ளது.
சிதம்பரத்தில் இரு தரப்பினர் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. சிதம்பரம் தொகுதியில் உள்ள அரியலூர் பொன்பரப்பி கிராமத்தில் இருதரப்பினர் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.
இதில் 20க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளதாக தெரிகிறது. சிதம்பரம் (தனி) தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், திமுக கூட்டணியில், பானை சின்னத்தில் போட்டியிடுகிறார்.
இந்த நிலையில், இன்று மதியம் தொகுதிக்கு உட்பட்ட பொன்பரப்பி கிராமத்தில் வேறொரு கட்சியை சேர்ந்தவர்கள் பானையை தெருவில் போட்டு உடைக்கும் போராட்டத்தை நடத்தியதாக தெரிகிறது.

இதை பார்த்த, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சிலர், பானையை உடைத்த கட்சியினரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, இரு தரப்புக்கும் மோதல் வெடித்தது. இதில் அந்த கிராமத்திலுள்ள 20க்கும் மேற்பட்ட வீடுகள் அடித்து நொறுக்கப்பட்டன. இதையடுத்து மாவட்ட எஸ்பி தலைமையில் போலீசார் அங்கு குவிக்கப்பட்டு, நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
 தமிழகத்தில் மாலை 5 மணி நிலவரப்படி, சிதம்பரம் தொகுதியில் தான் அதிகபட்சமாக 70.73 வாக்குகள் பதிவாகி இருப்பதாக தலைமைத் தேர்தல் அதிகாரி தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக