சனி, 13 ஏப்ரல், 2019

பிரதமர் மோடி தேனியில் இன்று தேர்தல் பிரச்சாரம்!

tamil.indianexpress.com : நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, பிரசாரம் மேற்கொள்ள பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வந்துள்ளார். மதுரையில் தங்கியுள்ள அவர், தேனி மற்றும் ராமநாதபுரம் பகுதிகளில் நடைபெறும் பொதுக்கூட்டங்களில் இன்று கலந்துகொள்கிறார்.
நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, தமிழகத்தில் சென்னை மற்றும் கோவையில் நடைபெற்ற பொதுக்கூட்டங்களில் பிரதமர் நரேந்திர மோடி ஏற்கனவே கலந்துகொண்டார். இந்நிலையில், இன்று மீண்டும் பிரசாரம் செய்ய உள்ளார். இதற்காக கேரளாவிலிருந்து நேற்றிரவு 10 மணியளவில், விமானம் மூலம் மதுரை வந்தடைந்தார்.

அவரை துணை முதலமைச்சரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம், மதுரை தொகுதி அதிமுக வேட்பாளர் ராஜ்சத்யன் ஆகியோர் வரவேற்றனர். அங்கிருந்து போலீஸ் பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்ட மோடி, பசுமலையில் உள்ள தனியார் விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளார். தேனியில் இன்று காலை 11 மணிக்கு நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்கிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக