ஞாயிறு, 14 ஏப்ரல், 2019

ஜூலியன் அசாஞ்சே . வல்லரசுகளின் முகிலன்? விக்கிலீக்ஸ் நிறுவனரின் எதிர்காலம்.. கருத்து சுதந்திரத்திற்கு ஒரு சவால்!

Sumathi Vijayakumar "' Julian Assange. கடந்த மூன்று நாட்களாய் உலகம் உச்சரிக்கும் ஒற்றை பெயர். லண்டனில் உள்ள Ecuador தூதரகத்தில் கடந்த 7 ஆண்டுகளாய் தஞ்சம் அடைத்திருந்தவரை அமெரிக்காவின் வேண்டுகோளின் பெயரில்
இங்கிலாந்து அரசு அவரை கைது செய்திருக்கிறது. எதற்காக இந்த கைது என்பதை ஒற்றை வரியில் சொல்ல வேண்டுமாயின், நம் ஊர் முகிலன் எதற்காக காணடிக்கப்பட்டாரோ அதே காரணத்திற்காக தான் Julian Assange கைது செய்யப்பட்டுள்ளார் .
ஆஸ்திரேலியாவில் பிறந்து வளர்ந்தவர் Julian. சிறிய வயது முதலே கம்ப்யூட்டர் மேல் அதிக ஆர்வம் கொண்டவர். திறமைசாலி. Computer Hacking என்று சொல்லப்படும் பிற கம்ப்யூட்டரில் இருக்கும் தகவல்களை ஊடுருவி தகவல்களை சேகரிப்பதில் வல்லமை பெற்றவர். பொதுவாக இத்தகைய திறமை கொண்டவர்கள் பெரும் நிறுவனங்களில் நம் கற்பனைக்கு எட்டாத அளவிற்கு சம்பளம் பெற்று உயர் பதவிகளில் இருப்பார்கள் . ஆனால் Julian தேர்ந்தெடுத்தது வேறு பாதையை.

Julian Assange பெயர் நமக்கு அன்னியமாய் இருந்தாலும் Wikileaks என்றால் பலருக்கும் பரிட்சயமாக இருக்கும். 2006ஆம் ஆண்டு Wikileaks என்ற வலைத்தளம் இவரால் துவங்கப்பட்டது. துவங்கப்பட்ட சமயம் அப்படி ஒரு வலைத்தளம் இயங்கியது பெரும்பான்மையோருக்கு தெரியாது. 2007ல் அவர் போட்ட ஒரு பதிவு உலகையே திரும்பி பார்க்க வைத்தது. Guantanamo Bay.
Guantanamo Bay என்பது கியூபா நாட்டின் தென்கிழக்கு பகுதியில் அமைந்திருக்கும் ஒரு கடற்கரை. 1903ஆம் ஆண்டில் 45 சதுரமைலை குத்தகைக்கு எடுத்தது அமெரிக்க அரசு. ஆரம்பகாலங்களில் அமெரிக்க கடற்படை தலமாக அமைக்கவே அந்த இடம் குத்தகைக்கு எடுக்கப்பட்டிருந்தாலும் நாளடைவில் அமெரிக்காவில் தஞ்சம் அடையவந்த அகதிகளை கைது செய்து அங்கு அடைத்து வைத்திருந்தது அமெரிக்கா. 1994-95ஆம் ஆண்டு மட்டும் அப்படி அடைத்து வைத்திருந்த கைதிகளின் எண்ணிக்கை 55,000.
2002 ஆம் ஆண்டு முதல் போர் கைதிகளை அங்கு வைத்து பல சித்திரவதைகளை மேற் கொண்டு வருகிறது. பல தற்கொலைகளும் மர்ம மரணங்களும் நிகழ்ந்திருக்கின்றன. யாருக்கும் தெரியாமல் கடற்படை தளமாக மட்டுமே காட்டிக்கொண்டிருந்த அமெரிக்காவின் கோர முகத்தை வெளிக்கொண்டு வந்தது Wikileaks.
இதனை தொடர்ந்து ஒபாமா அதை இப்போது மூடுகிறோம் அப்போது மூடுகிறோம் என்று கண்ணாமூச்சி ஆடிக்கொண்டிக்கும் சமயத்தில் ஆட்சி முடிந்து புதிதாய் பதவியேற்ற Donald Trump மேலும் பல கைதிகளை அங்கே அனுப்ப வழிவகை செய்துள்ளார்.
அடுத்ததாக 2008ஆம் ஆண்டு நடந்த அமெரிக்க துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட Sarah Palinனின் மின்னஞ்சல்களை வெளியிட்டு சலசலப்பை ஏற்படுத்தியது Wikileaks. மக்கள் மறந்திருந்த Wikileaks மீண்டும் 2010ல் உலக நாடுகளை திரும்பி பார்க்க வைத்தது. அந்த ஆண்டே தொடர்ந்து வெளியிட்ட நான்கு பதிவுகள் உலகையே புரட்டிப் போட்டது. Collateral Murder Videos, Afghanistan War Logs, Iraq War Logs, Cable Gate அன்று தொடர்ந்து மத்திய கிழக்கில் அமெரிக்கா கட்டவிழ்த்து விட்டிருந்த பயங்கரவாதத்தை தோலுரித்து காட்டியது. இராக்கில் கண்மூடித்தனமாக பொது மக்களை சுட்டு தள்ளிய அமெரிக்க விமான வீடியோ பதிவும் அதில் அடக்கம்.

உலகையே மிரட்டி பழகிய வல்லரசு தான் மிரட்டப்படுவதை அனுமதிக்குமா என்ன. Julian Assange அமெரிக்காவின் ரகசிய கோப்புகளை வெளியிட்டதாக கூறி கைது செய்ய மற்ற நாடுகளுக்கு அழைப்பு விடுத்தது. 2010ஆம் ஆண்டு ஸ்வீடன் நாடு Julianஐ கைது செய்ய சர்வதேச வாரண்டை பிறப்பித்தது. ஸ்வீடன் நாடு ஏன் கைது செய்ய வேண்டும்? Julian Wikileaksஐ துவங்கிய நாடு ஸ்வீடன் . அவர் ஸ்வீடினை தேர்ந்தெடுத்ததற்கான காரணம் ஒன்று தான். Anonymity.
அவரை பற்றிய எந்த வித தகவல்களும் வெளியில் வராது என்பதால். அமெரிக்காவின் வேண்டுகோளுக்கு பிறகு Julian மேல் இரண்டு பாலியல் குற்றங்கள் பதிவு செய்தது. Julian டிசம்பர் 2010 லண்டனில் சரண் அடைந்தார். 10 நாட்களில் பிணையில் வெளியே வந்தார். வெளியில் வந்தவர் மீண்டும் சிறைக்கு செல்லாமல் Ecuador தூதரகத்தில் தஞ்சம் புகுந்தார். 7 ஆண்டுகளுக்கு பிறகு Julianகு கொடுத்து வந்த ஆதரவை திரும்ப பெற்றது Ecuador. அதனை தொடர்ந்து 11 ஏப்ரல் அன்று லண்டன் காவல்துறை அவரை கைது செய்தது.
அவரை கெட்டவராக காட்டுவதற்கு பல நாடுகளும் ஊடகங்களும் முயற்சித்து கொண்டிருக்கும் வேளையில், அவருக்கு அமெரிக்காவின் Pentagonல் இருந்து தகவல்களை அனுப்பி கொண்டிருந்த Chelsea Manning என்பவர், Julian கு எதிராய் சாட்சி சொல்லமாட்டேன் என்று இன்னமும் சிறை தண்டனையை அனுபவித்து கொண்டிருக்கிறார்.
 Julian Assange ஒரு கெட்டவர், மனநலம் சரியில்லாதவர், பெண் மோகம் பிடித்தவர் என்று விதவிதமாய் கட்டமைக்க பட்டாலும், தன் வாழ்க்கை, சுதந்திரம், சொகுசு என அனைத்தையும் துறந்து அவர் வெளியிட்ட அதிகார, ஆணவ வர்க்கத்திற்கு எதிராய் அவரின் நேர்மைக்கு சான்றாய் ஆண்டாண்டு காலங்களுக்கும் எழுந்து நிற்கும் அவர் வெளியிட்ட தகவல்கள்.
அதிகார வர்கத்தை எப்போதும் அஞ்ச வைக்கும் ஒரே ஆயுதம் 'உண்மை' மட்டுமே . உண்மையை புத்தியில் ஏற்றுவோம். போராளிகளின் பக்கம் துணை நிற்போம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக