திங்கள், 15 ஏப்ரல், 2019

எஸ்.டி.பி.ஐ கட்சி வாக்காளர்களுக்கு டோக்கன்.. தடுக்க போன கலைஞர் மகள் செல்வி மீது கொலை முயற்சி வழக்கு

tamil.news18.com : அ.ம.மு.க கூட்டணி கட்சியான எஸ்.டி.பி.ஐ கட்சியினர்
வாக்காளர்களுக்கு டோக்கன் கொடுத்ததால், ஏற்பட்ட தகராறு தொடர்பாக தி.மு.க முன்னாள் தலைவர் மறைந்த கருணாநிதியின் மகள் செல்வி மீது கொலை மிரட்டல் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தி.மு.க மத்திய சென்னை வேட்பாளர் தயாநிதி மாறனை ஆதரித்து நேற்று மாலை சூளைமேடு பகுதியில் மறைந்த தி.மு.க தலைவர் கருணாநிதியின் மகள் செல்வி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்தார்
அப்போது அ.ம.மு.க கூட்டணிக் கட்சியின் மத்திய சென்னை வேட்பாளர் தெகலான் பாகவியை ஆதரித்து அக்கட்சியைச் சேர்ந்த ஹசீனா பேகம் மற்றும் ரிஷ்வானா பேகம் ஆகிய இரு பெண்கள் அதே பகுதியில் வாக்கு சேகரிப்பு மேற்கொண்டிருந்தனர்.
அப்போது, அவர்கள் வாக்காளர்கள் பட்டியல் வாங்கி டோக்கன் வழங்கியதாக கூறப்படுகிறது. அப்போது செல்வி உட்பட தி.மு.கவினர் அதை தட்டிக் கேட்டதால், இரு தரப்பிலும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக தி.மு.கவின் 108-வது வட்டச் செயலாளர் திருமலை என்பவர் சூளைமேடு காவல் நிலையத்திலும், தேர்தல் அதிகாரிகளிடமும் புகார் அளித்தார்.


அதனடிப்படையில் எஸ்.டி.பி.ஐ கட்சியைச் சேர்ந்த ஹசீனா பேகம் மற்றும் ரிஷ்வானா பேகம் மீது வாக்காளர்களுக்கு பணம் வழங்குவது, அவதூறாக பேசுவது உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் சூளைமேடு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இதேபோல் எஸ்.டி.பி.ஐ கட்சியைச் சார்ந்த ஹசீனா பேகம் அளித்த புகாரின் அடிப்படையில் கருணாநிதியின் மகள் செல்வி மற்றும் தி.மு.க பிரமுகர் திருமலை ஆகியோர் மீது கொலை மிரட்டல், தகாத வார்த்தைகளால் பேசுவது உள்ளிட்ட 2 பிரிவுகளில் சூளைமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக