வெள்ளி, 12 ஏப்ரல், 2019

பாலியல் குற்றச்சாட்டில் அமமுக வேட்பாளர்கள் டாக்டர் கதிர்காமு ,, தங்கத்தமிழ் செல்வன்


ns7.tv : பெரியகுளம் அதிமுக வேட்பாளர் டாக்டர் கதிர்காமு மீது போடப்பட்ட முதல் தகவல் அறிக்கையில், தேனி அமமுக வேட்பாளர் தங்க தமிழ்ச் செல்வன் பெயரும் இடம்பெற்றிருப்பது, புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.
பெரியகுளம் சட்டமன்ற தொகுதியில் அமமுக சார்பில் போட்டியிடும் கதிர்காமு, பெண் ஒருவருடன் படுக்கை அறையில் இருப்பது போன்ற காட்சிகள் வெளியாகின. இந்நிலையில், கதிர்காமு, கடந்த 2015ம் ஆண்டு, தம்மை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாக, தேனி மகளிர் காவல் நிலையத்தில் இளம்பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார்.
ஆனால், இந்த புகார் பொய்யானது என்றும், ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத்குமாரின் தூண்டுதல் பேரில் வழக்கு பதியப்பட்டுள்ளதாகவும், கதிர்காமு குற்றம்சாட்டினார். இதனிடையே, இந்த விவகாரத்தில் தங்க தமிழ்ச் செல்வன் பெயரும் சிக்கியுள்ளது. பெண் கொடுத்த புகாரின் மீது போடப்பட்ட முதல் தகவல் அறிக்கையில், தங்க தமிழ்ச் செல்வனின் பெயரும் இடம்பெற்றுள்ளது. இதனால், பாலியல் விவகாரத்தில், கதிர்காமுவோடு சேர்த்து, தங்க தமிழ்ச் செல்வனுக்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக