செவ்வாய், 2 ஏப்ரல், 2019

பிரேமலதா :தேமுதிக மீது கை வைத்தால் என்ன ஆகும் ? துரைமுருகன் வீட்டு ரெயிடு பிரேமலதா...

tamiloneindia - shyamsundar :  | சென்னை: தேமுதிக மீது கை வைத்தால் என்ன
ஆகும் என்பது வெட்ட வெளிச்சமாகிவிட்டது என்று திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டில் நடந்த ரெய்டு குறித்து தேமுதிக பொருளாளர் பிரேமலதா கருத்து தெரிவித்துள்ளார்.
 திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டில் கடந்த மூன்று நாட்களாக நடந்த ரெய்டு தற்போது முடிவிற்கு வந்துள்ளது. அதேபோல் திமுக பொருளாளர் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் கல்லூரியில் நடந்த வருமானவரித்துறையினர் சோதனையும் முடிந்துள்ளது. தேர்தல் பறக்கும்படை பிரிவினர் இந்த சோதனையை நடத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்த தேமுதிக பொருளாளர் பிரேமலதா கருத்து தெரிவித்துள்ளார்.அமித் ஷாவின் நெருங்கிய தொடர்பில் பிரேமலதா இருப்பது தெரிந்ததே .எனவே பிரேமலதா கூறுவதைஅசட்டையாக எடுத்து கொள்ள முடியாது என்று கருதவேண்டி உள்ளது .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக