வியாழன், 18 ஏப்ரல், 2019

பேராசிரியர் அன்பழகன் வாக்களித்தார் .. வீடியோ


tamil.thehindu.com : திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன், உடல் நலிந்த நிலையிலும் வாக்களித்தார்.
திமுகவின் நீண்ட கால பொதுச் செயலாளரான க.அன்பழகன், மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் நெடுங்கால நண்பராவார். மு.க.ஸ்டாலின் செயல் தலைவராக இருந்தபோதும், தற்போது தலைவராக உள்ள நிலையிலும், கட்சியின் முக்கியச் செயல்பாடுகளுக்கு க.அன்பழகனின் ஆலோசனைகளை அவ்வப்போது ஸ்டாலின் பெறுவார். கடந்த சில மாதங்களாக உடல்நலக் குறைவுடன் உள்ள க.அன்பழகன், தன்னுடைய வீட்டில் ஓய்வு பெற்று வருகிறார்.
இந்நிலையில், தமிழகத்தில் இன்று (வியாழக்கிழமை) மக்களவை பொதுத்தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு, 96 வயதான க.அன்பழகன் தன் வயது முதிர்ச்சியையும் பொருட்படுத்தாமல், சென்னை தெற்கு மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.

உடல் நலிந்த காரணத்தால் அவர் சக்கர நாற்காலியில் அமர்ந்து வந்து வாக்களித்தார். மூக்கில் ட்யூபுடன் மிகவும் நலிந்த தோற்றத்தில் அவர் காணப்பட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக