திங்கள், 1 ஏப்ரல், 2019

அமைச்சர் வேலுமணி பினாமியிடம் கைப்பற்றபட்ட பணம் துரைமுருகன் வீட்டில் என்று கப்சா! அம்பலமானது அதிகார தில்லுமுல்லு

துரைமுருகன் கோடௌன்ல பிடிச்சதா காட்டும் அந்த வீடியோவில், 49வது வினாடியில், எம்ஜிஆர் நகர், PN பாளையம் என்ற வார்டு பெயர் தெரியுது.  அது கோயம்பத்தூரில் இருக்கிற வார்டு. ஒரு வாதத்திற்கு வச்சிப்போம் வேலூர்காரன், தான் ஜெயிக்க ஏம்பா தம்பி கோயம்பத்தூரில் இருக்கிற வார்டுக்கு பணம் பட்டுவாடா பண்ணனும்? So,Better Luck Next Time.

இது அண்மையில் அமைச்சர் வேலுமணி பினாமி வீட்டில் நடந்த ரெய்டு .... இதை துரை முருகன் ஆதரவாளர் வீட்டில் கைப்பற்றபட்டதாக காண்பிக்கின்றனர். இந்த வீடியோவில் 49 வினாடி காட்டும் வார்டு முகவரியை கூகுளில் தேடினால் அதன் விலாசம் எம்ஜிஆர் நகர் P Nபாளையம் முல்லை நகர். கோயமுத்தூர் என வரும்... இப்டி ஒரு விலாசம் எங்க வேலூர்ல இல்ல ஏன் இந்த பழி போடுற வேலை
தினகரன் : இந்தியாவிலேயே  தேர்தல் காலத்தில் அதிகம் பணம் புரளும்
இடங்களாக தமிழகமும், மகாராஷ்டிராவும் மட்டுமே தேர்தல் கமிஷனால் கவனத்தில் கொள்ளப்படுகின்றன. அதிலும் தமிழகத்தில் தேர்தலின்போது பணம் பாதாளம்  வரைக்கும் கூட பாயக்கூடியது. தேர்தல் கமிஷன் எவ்வளவுதான் கண்காணிப்புகளை நடத்தினாலும் வாக்காளர்களுக்கு வந்து சேரும்
பணத்திற்கு எவ்வித தடையும் இருப்பதில்லை.தமிழகத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து இதுவரை முறையான ஆவணங்கள் இன்றி சுமார் 71 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஆளும் கட்சி அமைச்சருக்கு நெருக்கமான சென்னை நங்கநல்லூர்  கான்ட்ராக்டர் சபேசன் என்பவர் வீட்டில் 16 கோடியை தேர்தல் கமிஷன் கண்டெடுத்துள்ளது. இப்போது மட்டுமல்ல, கடந்த

காலங்களிலும் தேர்தல் சமயத்தில் தமிழகத்தில் வாக்காளர்களுக்கு விநியோகிக்கப்பட இருந்த பணம் கோடிக்கணக்கில் தமிழகத்தில் சிக்கியிருக்கிறது. கடந்த சட்டசபை தேர்தலுக்கு முன்பு  பணக்கட்டுக்களோடு கண்டெய்னர் லாரியே பிடிபட்டது. திண்டுக்கல்லை சேர்ந்த ஒருவரது வீட்டில் தேர்தல் அதிகாரிகள் கோடிக்கணக்கில் பணத்தை அள்ளினர். இதற்கெல்லாம் தேர்தல் கமிஷன் எடுத்த நடவடிக்கைகள்  பெயரளவுக்கே இருந்தன.


கடந்த 2014ம் ஆண்டு தமிழகத்தில் தேர்தல் தொடர்பாக 3746 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அதில் 2907 வழக்குகள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவிக்கிறது. ஆனால் தேர்தலுக்கு  பணம் கொடுத்தவர்கள் இதுவரை தண்டிக்கப்பட்டதாக தகவல் இல்லை. பணப்பட்டுவாடாவை தடுக்க நிலையாக நிற்கும் படைகள், பறக்கும் படைகள் என பல்வேறு படைகளை தேர்தல் ஆணையம் களமிறக்கியுள்ள நிலையில்  அவர்களிடம் சிக்குவது எல்லாம் சிறு வியாபாரிகளும், அப்பாவி ஜனங்களும்தான்.தேர்தல் நடத்தை விதிமுறைகள் மீறுவோர் மீது குற்றங்களை பதிவு செய்தாலும், அவற்றை நிரூபிக்க முடியாத நிலையிலேயே தேர்தல் அதிகாரிகள் உள்ளனர். அப்படியே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தாலும் தீர்ப்பு வர பல  ஆண்டுகள் ஆகிறது. அதிலும் அதிகபட்சமாக ஒரு ஆண்டு தண்டனை என்பது கேலிக்குறியதாக உள்ளது. தேர்தல் விதிமுறை சட்டங்களில் கடும் மாற்றங்கள் வந்தால் மட்டுமே வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது முற்றிலும்  தடைப்படும்.

வாக்களிக்க பணம் வாங்கக்கூடாது என்ற விழிப்புணர்வு இன்னமும் தமிழகத்தில் எடுபடவில்லை. இதன் மூலம் வெற்றியை நோக்கி நகரும் வேட்பாளர்களை கூட, கடைசி நேரத்தில் பணம் காலை வாரி விடுகிறது.  கோடிக்கணக்கில் பணத்தை கொட்டி வெற்றி பெறும் வேட்பாளர்கள், இழந்ததை ஈடுகட்ட மக்களுக்கான திட்டங்களில் கமிஷன் என்ற பெயரில் கைவைக்கின்றனர் என்பது வாக்காளர்களுக்கு தெரிவதில்லை. வேட்பாளர்கள்  பணத்தை வாரியிறைக்காத, வாக்காளர்கள் யாரிடமும் கையேந்தாத, நியாயமான, வெளிப்படையான தேர்தலைத்தான் தமிழகம் என்றும் எதிர்பார்க்கிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக