வெப்துனியா :காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஒருவருக்காக முகேஷ் அம்பானி ஆதரவாக பேசும் ஒன்று வெளியாகி அரசியல் களத்தில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
நாடு முழுவதும் கடந்த சில மாதங்களாக தேர்தல் ஜுரம் ஆட்கொண்டிருந்தது. மக்களவைத் தேர்தலின் 7 கட்ட வாக்குப்பதிவில் 2 கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. இன்னும் வாக்குப்பதிவு நடக்காத தொகுதிகளில் பிரச்சாரங்கள் நடைபெற்று வருகின்றன. வேட்பாளர்கள் தங்களுக்கு ஆதரவாக விளம்பரப்படங்களையும் எடுத்து வெளியிட்டு வருகின்றனர்.
அந்த வகையில் தெற்கு மும்பை மக்களவைத் தொகுதியின் வேட்பாளரான காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மிலிண்ட் தியோரா தனக்கு ஆதரவாக தொழில் முனைவோர்களைக் கொண்டு ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.
தெற்கு மும்பை தொழில் வளம் தொகுதி என்பதால் இந்த விளம்பரப்படத்தில் தொழிலதிபர்கள் இடம்பெற்றுள்ளனர். இதில் அனைவருக்கும் அதிர்ச்சியளிக்கும் விதமாக நாட்டின் மிகப்பெரிய பணக்காரரும் ரிலையன்ஸ் குழும அதிபருமான முகேஷ் அம்பானி காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாகப் பேசியுள்ளார்.
வீடியோவில் முகேஷ் அம்பானி ‘தெற்கு மும்பை என்றாலே தொழில் என்கிறார்கள். மும்பையின் தொழில்களை நாம் மீட்டெடுக்க வேண்டும். நம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும்’ எனக் கூறியுள்ளார். முகேஷ் அம்பானி காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவான விளம்பரத்தில் தோன்றியுள்ளதால் அத்தொகுதியில் பாஜக கூட்டணியில் சிவசேனாக் கட்சி வேட்பாருக்குப் பின்னடைவு ஏற்படலாம் எனத் தெரிகிறது. இதனால் பாஜக சிவசேனாக் கட்சிகள் அதிர்ச்சியடைந்துள்ளன

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக