வெள்ளி, 5 ஏப்ரல், 2019

அன்புமணியின் "பூத்ல நாம மட்டும் இருக்கும் போது என்ன நடக்கும்.. தேர்தல் ஆணையத்தில் புகார்.. நம்ப முடியுமா?

தினமணி :சென்னை: வாக்குச் சாவடியைக் கைப்பற்றத் தூண்டும் வகையில் பேசிய பாமக இளைஞர் அணித் தலைவர் அன்புமணி மீது தேர்தல்
ஆணையத்தில் திமுக புகார் அளித்துள்ளது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் 135ஏ - மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் படி 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்க வகை செய்யும் வகையில் அன்புமணி ராமதாஸ் பேசியிருப்பதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்  தேர்தல் ஆணையத்தில் திமுக புகார் அளித்துள்ளது. மக்களவைத் தேர்தலை முன்னிட்டு திருப்போரூர் மற்றும் காஞ்சிபுரத்தில் நேற்று பாமக வேட்பாளர்களை ஆதரித்து அன்புமணி ராமதாஸ் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது அங்கே கட்டுக்கடங்காமல் இருந்த கூட்டத்தினரிடையே பேசிய அன்புமணி, வாக்குச் சாவடியில் நாம மட்டுமே இருப்போம். யார் இருப்பாங்க.. நாம மட்டும்தான் இருப்போம். நீங்கள் இருப்பீங்கல்ல, நீங்க இருப்பீங்கல்ல.. அப்புறம் வாக்குச்சாவடியில் நாம மட்டுமே இருக்கும் போது பூத்ல என்ன நடக்கும்? என்று கேட்க பாமகவினர் கரகோஷத்துடன் முழக்கம் இட்டனர்.
வாக்குச்சாவடியை கைப்பற்றுதல் மற்றும் கள்ள ஓட்டுப் போட தூண்டுவது போலவே அன்புமணி ராமதாஸ் மறைமுகமாக அல்ல நேரடியாகவே பேசியிருந்தது அங்கே கூடியிருந்த தொண்டர்களில் ஒருவர் எடுத்த விடியோ  மூலம் வெளி உலகுக்குத் தெரிய வந்தது.
இந்த பேச்சு நேற்று சமூக ஊடகங்களில் பரவிய போதே சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், இதனை கொத்தாகப் பிடித்துக் கொண்ட திமுக சும்மா விடுமா? இன்று தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துவிட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக