திங்கள், 1 ஏப்ரல், 2019

வீரப்பன் மனைவியும் காடுவெட்டி குருவின் சகோதரியும் வேல்முருகன் கட்சியில் இணைந்தனர்

வெப்துனியா:தமிழக வாழ்வுரிமை கட்சியில் பாமகவின் முக்கிய தலைவராக விளங்கிய காடுவெட்டி குரு சமீபத்தில் மரணம் அடைந்தார். அவருடைய மரணத்திற்கு பாமகவினர் தான் காரணம் என அவரது குடும்பத்தினர் குற்றஞ்சாட்டி வருகின்றனர். இந்த நிலையில் காடுவெட்டி குருவின் சகோதரி செந்தாமரை, நேற்று வேல்முருகனின் தமிழக வாழ்வுரிமை கட்சியில் இணைந்தார். அதேபோல் சந்தனக்கடத்தல் வீரப்பன் மனைவி முத்துலட்சுமியும் நேற்று தமிழக வாழ்வுரிமை கட்சியில் இணைந்தார். இருவரும் மக்களவை தேர்தலில் போட்டியிட வாய்ப்பில்லை என்றாலும் பாமகவுக்கு எதிராக பிரச்சாரம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால் பாமகவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

நேற்று நடைபெற்ற அக்கட்சியின் மாநில செயற்குழுவில் வீரப்பன் மனைவி முத்துலட்சுமியும், காடுவெட்டி குருவின் சகோதரி செந்தாமரையும் இணைந்த விழாவில் பேசிய வேல்முருகன், 'நான் வாக்குறுதி தரமாட்டேன்; ஆனால் செய்ய வேண்டியதை செய்வேன். இருவர் மீது இனியும் ஒரு துரும்பு கூட விழாமல் பார்த்துக்கொள்வது எனது கடமை' என்று கூறினார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக