திங்கள், 1 ஏப்ரல், 2019

மிஷன் சக்தி’ ஏற்படுத்திய குப்பைத் துகள்கள்... விண்வெளியில் மிதப்பதாகக் குற்றச்சாட்டு...!

சிதம்பரம் : விண்வெளிக் கலத்தை ஏவுகணையால் சுட்டு வீழ்த்தும் ஆற்றல் பல ஆண்டுகளாக நமக்கு இருந்தது. புத்திசாலி அரசுகள் இந்த ரகசியத்தைக் காப்பாற்றினார்கள். பாஜக அரசு இந்த ரகசியத்தை வெளியிட்டது துரோகம். மேலும், தேர்தல் நேரத்தில் இந்த ரகசியத்தை வெளியிட வேண்டிய அவசியம் என்ன? தேர்தல் தோல்வி பயம் தான் காரணம்!
news18 ’மிஷன் சக்தி’ ஏற்படுத்திய குப்பைத் துகள்கள்... விண்வெளியில் மிதப்பதாகக் குற்றச்சாட்டு...!: அமெரிக்காவின் ராணுவ மையமான பெண்டகன் இதுவரையில் 250-க்கும் மேற்பட்ட குப்பைத் துகள்கள் இருப்பதைக் கண்டறிந்துள்ளதாக ராய்டர்ஸ் குறிப்பிட்டுள்ளது.
’மிஷன் சக்தி’ மூலம் விண்வெளியில் சுமார் 6,500 குப்பைத் துகள்கள் மிதப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கடந்த சில நாள்களுக்கு முன்னர் ‘மிஷன் சக்தி’ ஆப்ரேஷன் குறித்த அறிவிப்பை பிரதமர் மோடி அதிகாரப்பூர்வமாக நாட்டு மக்களிடம் அறிவித்தார். A-SAT செயற்கைக்கோள் மூலம் எதிராளியின் தாக்குதல் ஏவுகணைகளை இந்தியாவால் சமாளிக்க முடியும். சர்வதேச அளவில் விண்வெளியில் இத்திறன் கொண்ட நான்காம் நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது. ஆனால், சர்வதேச அளவில் இந்தியாவின் இந்தச் செயலுக்கு சில எதிர்மறை விமர்சனங்களும் வந்துள்ளன.


சூப்பர் பவர் மிகுந்த பொறுப்பு உணர்வுடன் இணைந்து வர வேண்டும். ஆனால், இந்தியாவின் மிஷன் சக்தி, பொறுப்பற்ற நிலையைக் காட்டுகிறது என விமர்சனங்கள் எழுந்துள்ளன.



இதுகுறித்து பாதுகாப்பு ஆய்வு மற்றும் வளர்ச்சிக் கழகத்தின் தலைவர் சதீஷ் ரெட்டி ராய்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் அளித்த பேட்டியில், “விண்வெளியில் குப்பை சேரக்கூடாது என்பதற்காகத் தான் குறைவான உயரத்தில் சோதனை முயற்சியை நடத்தினோம். எவ்வளவு குப்பைத் துகள்கள் உள்ளதென ஆராய்ந்து வருகிறோம்.
45 நாட்களில் குப்பைத்துகள்கள் மறைந்துவிடும்” எனக் கூறியுள்ளார். அமெரிக்காவின் ராணுவ மையமான பெண்டகன் இதுவரையில் 250-க்கும் மேற்பட்ட குப்பைத் துகள்கள் இருப்பதைக் கண்டறிந்துள்ளதாக ராய்டர்ஸ் குறிப்பிட்டுள்ளது. ஆனால், 6,500-க்கும் மேற்பட்ட துகள்கள் இருக்கலாம் என சர்வதேச நிறுவனமான ‘அனாலிட்டிகல் க்ராஃபிக்ஸ்’ தெரிவித்துள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக