செவ்வாய், 30 ஏப்ரல், 2019

ஹாஸ்டல் பெண்களின் உள் ஆடைகளை கழட்டிய வார்டன்? அதிர்ச்சி காரணம்

In a shocking incident, around a dozen female students of a private university, Akal University, in Bathinda (Punjab) were forced to strip their clothes for allegedly dumping a used sanitary pad in the hostel's washroom.
Devi Somasundaram : பஞ்சாப் பதிந்தால இருக்கும் அகல் யுனிவர்ஸ்டில ஹாஸ்டல் டாய்லட்ல நாப்கின ப்ளஷ் செய்தது தொடர்பா யார் அப்படி செய்ததுன்னு கண்டுபுடிக்க பெண்களின் ஆடைகளை கழட்டி செக் செய்து இருக்கு ஹாஸ்டல் நிர்வாகம் .
பெண் ஊழியர்கள் வைத்து தான் செக் செய்தோம்னு கேவலமா ஒரு விளக்கம் வேற தந்திருக்கு .
பொதுவாவே சமுக ஒழுக்கம் என்பது நமக்கு சொல்லி தர படாதது .. ஹாஸ்டல் டாய்லட் அடைச்சுகிட்டா க்ளின் செய்ய செலவு ஆகும் என்ற கோபத்தில் இந்த நடவடிக்கை நடந்து இருக்கலாம் ...
ஆனா ரோட்ல பொலிச்சுன்னு எச்சில் துப்புவதும் இதே மாதிரி சமுக குற்றம் தான்னு இந்த ஹாஸ்டல் வார்டன்களுக்கு தெரியுமா ,கண்டிப்பார்களா ? .
அது அவர்களை நேரடியாக பாதிக்க் போவதில்லை என்பதில் அவர் அறம் சீற்றம் முரண்படும் .
அபார்மெண்ட்ஸ் மாதிரி பெரிய அமைப்புல டாய்லட் பைப் லைன் ஸ்டரக் என்பது பெரிய பாதிப்ப தரும் .. ஆனா அதன் பழி பெண்கள் மேல தான் போடப்படும் .. பைப் லைன் க்ளின் செய்யும் போது நாப்கின் கிடப்பது பேசப்படும் , காண்டம் கிடந்தது பேசப்படாது ..அதில் ஆண்க்ளின் குற்றமும் இருப்பது என்பதால் அதை கவனமா கடந்துடுவாங்க .

சரி விஷயத்துக்கு வருவோம்...ஹாஸ்டல்ல நாப்கின் போட எந்த வசதியும் செய்து தர படுவதில்லை ...பல பெண்களுக்கு டாய்லட்ட எப்படி யூஸ் செய்னும்னே தெரியாது .. எந்த நிர்வாகமும் சொல்லி தருவதுமில்லை .
டாய்லட் பைப் லைன் கன்ஸ்ட்ரக்‌ஷனே நம்மூர்ல சரி கிடையாது ..யூ எஸ்ல ஒவ்வொரு டாய்லட் பைப்பும் தனி தனி அமைக்க பட்டு வீட்டோட முனை பகுதிக்கு கொண்டு வர படும் ..பைப் லைன் போர பகுதி ஒரு சிறு அடையாளத்தால் குறிக்க படும் .
பாதிப்பு வந்தா எந்த டாய்லட்ல தவறா உபயோகம்னு எளிதில் கண்டுபிடிக்க இயலும்.
நம்மூர்ல செலவு குறைவுன்னு ஒரே பைப் லைன்ல எல்லாம் கனக்ட் செய்ய படும் . ஒரு இடத்தில் அடைப்பு வந்தா மொத்தமா பாதிக்கும் ..
இப்படி அடிப்படைல நிறைய தவறை வைத்து கொண்டு நாப்கின் போட்டது மட்டுமே குற்றமாக்க எப்படி அதிகாரம் தர படுகிறது என்பது தான் நம் சமுக அமைப்பின் அவலம் .
காட்டுமிராண்டி தனமா இந்த செயலை எதிர்த்து கல்லூரி பெண்கள் , மாணவர்கள் 600 பேர் போராட்டம் செய்யவும் இரண்டு வார்டன்களை வேலையில் இருந்து நீக்கி உள்ளது நிர்வாகம் .
ஆனால் அந்த வார்டன்களிடம் அப்படி ஒரு நிர்பந்தத்தை உருவாக்கிய கல்லூரி நிர்வாகத்தின் தவறுக்கு என்ன தண்டனை ? ..
கல்வி என்பது அறிவை தரும் இடம்..அங்கயே இந்த மாதிரி அனாகரீகங்கள் என்பது நம் சமுகம் குறித்த அச்சத்தை அதிகமாக்குது .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக