திங்கள், 8 ஏப்ரல், 2019

ஆர்எஸ்எஸ் திட்டத்தை நடைமுறைபடுத்தும் நாம் தமிழர் கட்சி .. சாயம் வெளுத்த சீமான்

முருகன் கண்ணன் : நாம் தமிழர் கட்சி ஆர்எஸ்எஸ் திட்டத்தை நடைமுறைபடுத்தும் கூடாரம்*
சீமானே இது தான் உங்க தமிழ் தேசியமா ? பார்ப்பனியத்தால் ஒடுக்கப்பட்ட சமுக மக்களை இழிஜாதியாக பார்ப்பதும் இழிஜாதி நாயே என்று திட்டுவதும் ,ஜாதி தான் தமிழனின் அடையாளம் ஆகவே ஜாதியை இழந்து விட கூடாது அதற்காக ஜாதி மறுப்பு திருமணம் செய்ய கூடாது , நாயுடு , அருந்ததியர் சமுகங்கள் தமிழர்கள் கிடையாது என்று ஜாதியை வைத்து தமிழின அடையாளம் காண்பது போன்றவைகள் தான் உங்க தமிழ் தேசியமா ?
தெழுங்கு மொழி பேசும் நாயடு, செட்டியார், முதலியா *தமிழகத்தில் நடைபெறும் ஜாதிய ஒடுக்குமுறைகள் மற்றும் படுகொலைகளுக்கு எதிராக நாம் தமிழர் கட்சி போராட்டங்கள் ஏதும் நடத்துவது இல்லை என்பதற்கான காரனங்களை நாங்கள் நன்றாக அறிவோம் என்பது தெரியுமா ?* தமிழகத்தில் ஜாதியவாதத்தை இறுக்கமாக தக்க வைக்கவும் ஜாதிய ஒடுக்குமுறைகளை ஏற்படுத்தவும் ஜாதிய

படுகொலைகளை செய்யவும் ஜாதி மறுப்பு திருமணம் செய்பவர்களை ஆணவபடுகொலைகளை செய்யவும் சீமான் , ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமார் , யுவராஜ் , ஸ்ரீவைகுண்டம் சுரேஷ் , நாம் தமிழர் கட்சி தென்மண்டல பொறுப்பாளர் வழக்கறிஞர் சிவகுமார் ஒருங்கிணைந்து செயல்படுகிறார்கள்.
இளவரசன் ,கோகுல்ராஜ் , விஷ்ணுபிரிய போன்றவர்கள் மரணங்களை தற்கொலை என்று கூறியதும், சங்கர் படுகொலை செய்யப்பட்டவுடன் அவனை அருந்தநியன் மாற்று மொழி பேசுபவன் என்று நாம் தமிழர் கட்சியினர் மடைமாற்ற முயற்சித்ததும் , சகோதரி நந்தினி வன்புணர்வு செய்து படுகொலை செய்யப்பட்ட போது அந்த பெண்ணிற்காக நாங்க ஏன் போராட வேன்டும் என்று ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராக தொடர்ந்து செயல்படுவதற்கும் அரசியல்ரீதியாக தங்களை வேறு வகையில் அடையாளப்படுத்த உருவாக்கப்பட்ட இயக்கமே நாம் தமிழர் கட்சி
நாம் தமிழர் கட்சி ஆர்எஸ்எஸ் திட்டத்தை நடைமுறைபடுத்தும் ஜாதிய பயங்கரவாதிகளின் கூடாரம் murugan kannan

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக