சனி, 6 ஏப்ரல், 2019

கலைஞரின் வாழ்வொளி திட்டம் . மூட்டு வாத இருதய நோயால்( acute rheumatic fever ) பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு இலவச ..

Dr.Ezhilan_Naganathan : 1980 1990 களில் மூட்டு வாத இதய நோய் பெரும் அளவில் தமிழ்நாட்டை உலுக்கி வந்த நேரம்.
பள்ளி  குழந்தைகளுக்கு சாதாரண தொண்டை காய்ச்சல் மற்றும் தோள் கிருமி கட்டி உண்டாகும் கிருமி "streptococcus"
இந்த நோய் வந்து போன பிறகு பாதிக்கப்பட்ட குழந்தைகள் acute rheumatic fever பாதிக்கப்படுவர்.
பரவி பரவி மூட்டி வீக்கம் வலி , நீண்ட நாள் காய்ச்சல், வலிப்பு தன்மை , உடம்பில் சிகப்பு படை போன்ற நோய் விளைவுகளால் பாதிக்கப்படுவர்.
அதோடு நிற்காமல் அந்த குழந்தைகள் பருவ மட்டும் நடுத்தர வயது வரும் போது இருதய வால்வுகள் பழுது அடைந்து இருதய பலவினம் ஏற்பட்டு இறந்து விடுவார்கள். இந்த இருதிய நோயினால்(rheumatic heart disease ) பாதிக்கப்பட்டு இறுப்பு சதவிகிதம் 28% ஆக இருந்தது. பல இளம் கர்பணி பெண்களும் இதன் பாதிப்புக்கு உள்ளாகினர்.
லட்சக்கணக்கான பாதிக்கப்பட்ட மக்களில் ஒரு சிலருக்கு மட்டுமே வால்வுகள் மாற்றம் இருதய அறுவை சிகிச்சை வாய்ப்பு கிட்டும்.மற்றவர்கள் இறுந்து போவார்கள்.

மறைந்த முன்னாள் சென்னை மருத்துவக் கல்லூரியில் இருதிய மருத்துவ மற்றும் அறுவை சிகிச்சை தலைமை பேராசிரியர் வீக்டர் சாலமன் இதற்கு ஒரு தீர்வு முறை வழி மொழிந்தார்.
அவர் தந்தை பேராசிரியர் முனைவர் நாகநாதனின் நெருங்கிய நண்பர். ஒரு ஆய்வு அரங்கில் இருவரும் கலந்து பேசினார்கள். இந்த மூட்டு வாத இருதய நோய் தடுக்க வேண்டும் என்றால் தொண்டை காய்ச்சல் கிருமி பரவி மூட்டு வாதம் என்று பாதிக்கப்படும் போது அந்த பள்ளி குழந்தைகளுக்கு பென்சிலின் (penicillin ) ஊசியோ மாத்திரைகளோ கொடுத்தால் பிற்காலத்தில் வரும் இருதய வால்வுகள் பழுது அடைவதை தடுக்கலாம்.
ஆனால் இந்த தற்காப்பு முறை மாநில முழுவதும் செயல்படுத்தினால் மட்டுமே தீர்வு ஏற்படும் என்று முடிவுக்கு வந்தார்கள். அப்போது ஜெயலலிதா அதிமுக அராஜக அரசை வீழ்த்தி 1996 திமுக மாபெரும் வெற்றி அடைந்த நேரம் ‌
இந்த திட்டம் ஒருவரால் மட்டுமே சாத்தியப்படும் என்று இருவரும் நம்பினார்கள்.
அவர் தான் "டாக்டர் கலைஞர்'
பேராசிரியர் நாகநாதன்‌‌ அய்யா கலைஞருடன் காலை நடைபயிற்சியின் போது மருத்துவர் விக்டர் சாலமன் மூட்டு வாத இருதய நோய் தடுப்பு முறைகளை பற்றி விவரித்தார்.
அடுத்த நாளே முதல்வர் கலைஞர் மருத்துவர் விக்டர் சாலமன் அழைத்து பேசினார்.இந்த திட்டத்தை எப்படி செயல்படுத்த முடியும் என்று கலந்தாய்வு நடந்தது.மருத்துவர் விக்டர் சாலமன் பரிந்துரைகள் அனைத்தும் ஏற்கப்பட்டது.
முதல்வரின் நேரடி கண்காணிப்பில் இந்த திட்டம் வரையறை செய்யப்பட்டது.
கலைஞரே இந்த திட்டத்திற்கு "வாழ்வொளி" என்று பெயர் சூட்டினார்.
தனி நிதி ஒதுக்கீடு செய்தார்.
இந்த திட்டத்தின் கீழ் தமிழ் நாடு முழுக்க பள்ளி ஆசிரியர்களுக்கு இந்த மூட்டு வாத இதய நோய் ஆரம்ப அறிகுறிகள் கண்டறிய பயிற்சி கொடுக்கப்பட்டது. அவ்வாறு அந்த குழந்தைகளுக்கு நோய் அறிகுறிகள் ஆசிரியர் கண்டு அறிந்தால், ஒரு மஞ்சள் அட்டை அந்த குழந்தைக்கு கொடுக்கப்பட்டு பெற்றோர் வரவழைக்கப்பட்டு அருகில் உள்ள ஆரம்ப சுகாதார மையத்தில் பதிவு செய்ய வேண்டும்.
மருத்துவர்கள் சுகாதார அதிகாரிகள் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் கிராமத்திற்கு சென்று அங்கு இதே மாதிரி மற்ற குழந்தைகள் பாதிக்கப்பட்டு உள்ளார்களா என்று கண்டறிய வேண்டும்.
சூற்று சூழல் கை கழுவும் முறை அடிப்படை சுத்தமான வாழ்வு முறைகள் பற்றி அறிவுரை வழங்க வேண்டும்
மூட்டு வாத இருதய நோயால்( acute rheumatic fever ) பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு இலவசமாக மாதம் ஒரு முறை பென்சிலின் ஊசி அல்லது மாத்திரைகள் 10 வருடங்களுக்கு கொடுக்க வேண்டும்.
இந்த திட்டம் முதல்வரின் நேரடி கண்காணிப்பில் இருந்ததால் மிக நேர்த்தியாக நடைமுறைப்படுத்தப்பட்டது.
Active case finding reporting and penicillin prophylaxis for rheumatic fever.
அரசாங்க பள்ளி ஆசிரியர்கள் இந்த திட்டத்தை அக்கறையோடு நடைமுறை படுத்தினார்கள்‌.
மூன்று துறைகள் -நிதித்துறை கல்வித்துறை சுகாதார துறை இணைந்து செயல்பட்டனர்.(inter departmental
coordination under one committed chief minister )
ஐந்து வருடங்களில் கணிசமான முறையில் மூட்டு வாத இருதய நோய் பாதிப்பு குறைந்தது. பல லட்சக்கணக்கான குழந்தைகள் கர்பணி பெண் இருதய வால்வுகள் இந்த நோய் தடுப்பு முயற்சியால் பழுது அடையாமல் தடுக்கப்பட்டது. வால்வுகள் மாற்று சிகிச்சை எண்ணிக்கை குறைந்தது.பல லட்சக்கணக்கான தமிழ் நாட்டு மக்களின் உயிர்கள் பாதுகாக்கப்பட்டது.
பிறகு இந்த திட்டம் நிதி பற்றாக்குறை காரணமாக அடுத்த வந்த ஜெயலலிதா ஆட்சியில் 2001 பள்ளி சுகாதார திட்டம் -school health system " கீழ் கொண்டு வரப்பட்டது.
பல மாநிலங்களில் வந்த சுகாதார துறை அமைச்சர்கள் தமிழ் நாட்டின் success story கண்டு வியந்து போனார்கள்.பல்வேறு பெயர்களில் இந்தியாவில் பல மாநிலங்களில் இந்த திட்டம் செயல்பட்டு கொண்டு இருக்கிறது.
நான் சென்னை மருத்துவக் கல்லூரியில் மாணவராக இருக்கும் போது மூட்டு வாத இதய நோயாளிகள் வைத்து எங்கள் தேர்வுகள் நடத்தப்படும்‌.எங்களின் முக்கியமான exam case. இப்போது 20 வருடங்கள் கழித்து மருத்துவ கல்லூரிகள் இந்த நோயினால் பாதிக்கப்பட்ட மக்களை நாங்கள் பார்ப்பதே இல்லை.very common case rare case ஆக மாற்றம் அடைந்தது.
1990களில் 28% சதவிகிதம் இருந்து மூட்டு வாத இருதய நோய் 2015 களில் 0.8% சதவிகிதமாக குறைந்தது. இது மருத்துவ துறையில் ஓர் வரலாற்று சாதனை.
Vision converted into reality through friendship. மருத்துவர் விக்டர் சாலமன் - பேராசிரியர் நாகநாதன்‌‌ நட்பு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக