திங்கள், 8 ஏப்ரல், 2019

மதச்சார்பற்ற கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி? ஊடகங்கள் மறைக்கும் களநிலவரம்!

Karuna Kumuthan : கடந்த 15 நாட்களாக ஒரு தலைவன் தமிழ்நாடு முழுக்க
சுற்றி சுற்றி வருகிறார் போகும் இடங்களில் எல்லாம் மக்கள் கூட்டம்
ஆர்ப்பரிக்கிறது ஒரு நாளைக்கு இரண்டு கூட்டங்கள்,தெருமுனை பிரச்சாரக் கூட்டங்கள்,காலையில் நடைப்பயிற்சி செய்யும்போது மக்களோடு மக்களாய்..
இன்றைய அரசியல் களத்தில் மக்கள் அதிகமாக நேசிக்கும் ஒரே தலைவன் தளபதி ஸ்டாலின் அவர்கள் மட்டுமே. மற்ற கட்சிகள் அனைத்தும் பிரச்சாரம் செய்வதற்கு தலைவர்களே இல்லாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறது
கூட்டணி அமைப்பதற்கு முன்னால் வந்த பாஜாக தலைவர்கள் தமிழ்நாட்டுக்கு வர அஞ்சுகிறார்கள் ஏனென்றால் கூட்டமே கூடுவதில்லை... இபிஎஸ் தனி ஒரு ஆளாக பிரச்சாரம் செய்கிறார் ...ஓபிஎஸ் தேனிமட்டும் வெற்றிபட்டால் போதும் என சுற்றிக்கொண்டிருக்கிறார்.தமிழிசை தூத்துக்குடியை தாண்ட முடியவில்லை பொன்ராதா நெல்லையை தாண்ட முடியவில்லை, எச்ச ராஜா சிவகங்கையை தாண்டி ஒன்றும் பிரச்சாரத்திற்கு வரமுடியவில்லை..இரண்டு மருத்துவர்களும் முடக்குவாதம் வந்தது போல் ஏழு தொகுதிகளிலேயே முடங்கிப் போய் விட்டார்கள்.. விஜயகாந்த் இல்லாமல் விழிபிதுங்கும் தேமுதிக.
இது போன்ற மக்கள் நலமற்ற, தன்நலம் போற்றும் தலைவர்களுக்கு மத்தியில் .....தளபதி என்ற ஒரே தலைவன் மக்களுக்காக மக்களின் நலனுக்காக தமிழக நலனுக்காக பம்பரமாய் உழைத்துக் கொண்டிருக்கும் ஒரு ஓய்வறியா தலைவன்-தளபதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக