வெள்ளி, 5 ஏப்ரல், 2019

மு.க.ஸ்டாலின் மீது 3 பிரிவுகளில் பாய்ந்தது வழக்கு... கோவை ,,

/tamil.oneindia.com - veerakumaran : . பொல்லாத ஆட்சி தமிழகத்தில் நடந்து வருகிறது..மு.க.ஸ்டாலின் பேச்சு-வீடியோ
சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மீது கோவை போலீசார் 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கோவை தொண்டாமுத்தூரில் நடைபெற்ற தேர்தல் பொதுக் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பேசினார். அப்போது பொள்ளாச்சி பாலியல் பலாத்கார விவகாரம் தொடர்பாக, பார் நாகராஜ் மற்றும் அமைச்சர் ஒருவர் இடையே தொடர்பு இருப்பதாக ஸ்டாலின் குறிப்பிட்டு பேசினார். தனக்கும் பெண் குழந்தை இருப்பதாகவும், பொள்ளாச்சி சம்பவம் மிகவும் வேதனையை தருவதாகவும் ஸ்டாலின் உருக்கமாக கூறினார்.
இந்த நிலையில் அதிமுக வழக்கறிஞர் பிரிவு நிர்வாகி ராமச்சந்திரன் என்பவர் கோவை தொண்டாமுத்தூர் காவல் நிலையத்தில் இது தொடர்பாக ஒரு புகார் அளித்திருந்தார்.

அந்த புகாரில், ஆதாரம் இல்லாமல் அமைச்சர் வேலுமணி தொடர்பாக அவதூறு பரப்பும் வகையில் ஸ்டாலின் பேசியுள்ளார். எனவே, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு இருந்தது. இந்த புகாரை ஏற்றுக்கொண்ட தொண்டாமுத்தூர் போலீசார், ஸ்டாலின் மீது மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒருவரின் மாண்பை சீர்குலைப்பது மற்றும் அமைதியை சீர்குலைப்பது, இரு பிரிவினரிடையே மோதல் ஏற்படுத்தும் வகையில் பேசுவது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் காவல்துறையின் வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக