திங்கள், 29 ஏப்ரல், 2019

3 எம்.எல்.ஏ.க்களின் தகுதி நீக்க கோரிக்கையை ஏற்க கூடாது சபாநாயகருக்கு வைகோ வேண்டுகோள்

3 எம்.எல்.ஏ.க்களின் தகுதி நீக்க கோரிக்கையை ஏற்க கூடாது சபாநாயகருக்கு வைகோ வேண்டுகோள்தினத்தந்தி : சென்னை, ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
 3 எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை முதல்வர் பொறுப்பில் இருந்து மாற்ற வேண்டும் என்று தமிழக கவர்னரிடம் மனு கொடுத்த காரணத்தால், அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் கடந்த 2017 செப்டம்பர் மாதம் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர்.
சபாநாயகரின் இந்த நடவடிக்கை செல்லும் என்று சென்னை ஐகோர்ட்டும் தீர்ப்பளித்தது. அதைத்தொடர்ந்து 18 எம்.எல்.ஏ.க்கள் இடமும் காலி என்று அறிவிக்கப்பட்டது. ஏப்ரல் 18-ந் தேதி நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலுடன் 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தப்பட்டு இருக்கிறது.
 மேலும் காலியாக உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளுக்கும் மே 19-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில்தான் மேலும் 3 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆளும் கட்சி கொறடாவும், சட்ட அமைச்சரும் சபாநாயகரிடம் மனு அளித்துள்ளனர்.
எம்.எல். ஏ.க்கள் ரத்தினசபாபதி, வி.டி. கலைச்செல்வன், அ.பிரபு ஆகிய மூவருக்கும் சபாநாயகர் நோட்டீசு அனுப்பி இருக்கிறார். இவர்கள் மூவரையும் தகுதி நீக்கம் செய்வதற்கான முன்னோட்டமாகவே இந்த நடவடிக்கைக் கருதப்படுகிறது.

புதை குழிக்கு போய்விடும் கட்சித் தாவல் சட்டப் பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்க அரசியல் சட்டத்தில் இடம் இருந்தாலும், எடப்பாடி பழனிசாமி அரசு பதவியில் நீடிப்பதற்காகவே சபாநாயகரிடம் ஆளும் கட்சி கொறாடா புகார் செய்து இருக்கிறார். மே 23-ந் தேதி நாடாளுமன்ற மற்றும் 22 சட்டமன்றத் தொகுதிகளின் தேர்தல் முடிவுகள் மத்தியில் ஆளும் பா.ஜனதாவுக்கும், தமிழ்நாட்டில் அ.தி.மு.க.வுக்கும் எதிரானதாகவே இருக்கும் என்பது வெளிப்படையாக தெரிந்துவிட்டது.

  வேண்டுகோள் /> சட்டமன்றத்தில் பெரும்பான்மையை இழக்கப்போவது உறுதி ஆகிவிட்டது. எனவே எப்பாடு பட்டாவது பதவியை காப்பாற்றிக் கொள்வதற்கு எடப்பாடி பழனிசாமி அரசு, அரசியல் சட்ட நெறிமுறைகளைக் காற்றில் பறக்கவிட்டுவிட்டு, மேலும் 3 எம்.எல்.ஏ.க்களின் பதவியைப் பறிக்கத் துடிக்கிறது.

சட்டமன்ற மரபுகளைப் பேணிக் காக்க வேண்டிய சபாநாயகர், ஆளும் கட்சியின் அரசியல் நோக்கங்களுக்கு ஆதரவாகச் செயல்பட்டால் ஜனநாயகம் புதை குழிக்கு போய்விடும் என்பதை உணர்ந்து, 3 எம்.எல்.ஏ.க்களின் தகுதி நீக்கக் கோரிக்கையை ஏற்காமல் புறந்தள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது>

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக