புதன், 17 ஏப்ரல், 2019

பின்வாங்கிய லைகா: சிக்கலில் கமலின் 'இந்தியன் 2'

இந்தியன் 2
ஷங்கர் Siva -  tamiloneindia l சென்னை: கமல் ஹாஸனின் இந்தியன் 2 படத்திற்கு பிரச்சனை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கமல் ஹாஸன் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான இந்தியன் படத்தின் 2ம் பாகத்தை இயக்கி வருகிறார் ஷங்கர். இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது.
கமல் ஹாஸன் லோக்சபா தேர்தலில் கவனம் செலுத்த வசதியாக படப்பிடிப்பை தற்காலிகமாக நிறுத்துமாறு ஷங்கரிடம் கோரிக்கை விடுத்தார். இதையடுத்து படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.
இந்தியன் 2 படத்தை தயாரிக்க முடியாது என்று கூறி லைகா நிறுவனம் தெரிவித்துவிட்டதாக பேச்சு கிளம்பியுள்ளது. ஆனால் லைகா மற்றும் கமல் ஹாஸனை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி படத்தை எடுக்கப் பார்க்கிறாராம் ஷங்கர்.
லைகாவுடனான பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தால் வேறு தயாரிப்பு நிறுவனத்தை அணுக முடிவு செய்துள்ளாராம் ஷங்கர்.
இந்தியன் 2 பட பட்ஜெட் எகிறுவதால் லைகா நிறுவனம் படத்தில் இருந்து வெளியேறுவதாகவும், படம் கைவிடப்படுவதாகவும் முன்பு தகவல் வெளியானது.

ஆனால் படம் கைவிடப்படவில்லை என்று படக்குழு தரப்பில் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு படப்பிடிப்பை துவங்குமாறு கமல் ஹாஸன் ஷங்கரிடம் கூறியிருந்தார்.
இந்நிலையில் படப்பிடிப்பை மீண்டும் துவங்குவதில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. ஷங்கர் நிச்சயம் பிரச்சனையை தீர்த்துவிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மக்கள் நீதி மய்யம் கட்சி துவங்கி நடத்தி வரும் கமல் முழு நேர அரசியலில் ஈடுபட வசதியாக படங்களில் நடிப்பதை நிறுத்த முடிவு செய்துள்ளார். அவர் நடிக்கும் கடைசி படம் தான் இந்தியன் 2 என்பது குறிப்பிடத்தக்கது 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக