ஞாயிறு, 21 ஏப்ரல், 2019

2 இரண்டு தாக்குதல்கள் தற்கொலைத் தாக்குதல்கள். சந்தேக நபர்கள் சிலர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இலங்கைநெட்.com : இன்று காலை தொடக்கம் இலங்கையில் மேற்கொள்ளப்பட்டுள்ள 8 குண்டுத்தாக்குதல்களில் குறைந்தது இரண்டு தாக்குதல்கள் தற்கொலைத் தாக்குதல்கள் என தெரியவருகின்றது. சங்கரிலா ஹோட்டல் மற்றும் கொட்டாஞ்சேனை புனித அந்தோனியார் ஆலயங்கள் மீது மேற்கொள்ளப்பட்டுள்ள தாக்குதல்கள் தற்கொலைத் தாக்குதல்கள் என தெரியவருகின்றது. சங்கரிலா ஹோட்டல் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் பின்னணியில் சஃரான் ஹசிம் என்ற பயங்கரவாதி ஒருவன் உள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இதே நேரம் இச்சம்பவத்துடன் தொடர்புடைய சிலர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். 
தெமட்டகொடை தொடர்மாடி ஒன்றிலுள்ள வீடு ஒன்றும் மற்றும் தெஹிவளை பிரதேசத்திலுள்ள தங்குமிட விடுதி ஒன்றும் சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளது

தினமலர் : கொழும்பு: இலங்கையில் இன்று ( 21 ம் தேதி) காலை 3 தேவாலயங்கள்
மற்றும் 3 நட்சத்திர ஓட்டல்களில் தொடர் குண்டுவெடிப்பு நடந்துள்ளது. இது தொடர்பாக அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது: இலங்கையில் காலை. 8. 45 மணியளவில் ஒரே நேரத்தில் 6 இடங்களில் குண்டுவெடித்துள்ளது. கொச்சக்கடை, நீர்க்கொழும்பு, மட்டக்களப்பு, மற்றும் 3 நட்சத்திர ஓட்டல்களில் குண்டு வெடித்தது. இதில் 129 பேர் பலியாகி உள்ளனர். 300 பேர் காயமுற்றுள்ளனர். தற்கொலை படையினர் இந்த தாக்குதலில் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. 9 பேர் வெளிநாட்டை சேர்ந்தவர்கள் பலியாகி உள்ளனர். ஷக்ரான் ஹசீம் மற்றும் அபு முகம்மது என்ற இருவர் இந்த குண்டு வெடிப்பை நிகழ்த்தியதாக தெரிய வந்துள்ளது. குண்டுவெடிப்பு தொடர்பாக அவசர எண்ணாக 947790302 அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக