வியாழன், 11 ஏப்ரல், 2019

அமித் ஷா 280 கம்பனிகளின் பங்குகளை வாங்கியுள்ளார் .. முழு விபர பட்டியல் ..

SP Somasundaram : 17 கோடியே 56 லட்சம் முதலீடு
280 நிறுவனங்களில் பங்குகளை வாங்கிய அமித்ஷா
பாஜக தலைவர் அமித்ஷா, குஜராத்மாநிலம் காந்தி நகர் மக்களவைத் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். இந்நிலையில், அந்த வேட்புமனுவுடன் அமித்ஷா தாக்கல் செய்துள்ள சொத்து விவரங்களில், புதிய தகவல்கள் பல வெளியாகியுள்ளன
.அமித்ஷா தனக்கு ரூ. 30 கோடியே 49 லட்சம் அளவிற்கு சொத்துக்கள் உள்ளதாக கணக்கு காட்டியுள்ளார் என்றால், இதில், கார்ப்பரேட் நிறுவனங்களில் அவருக்கு இருக்கும் பங்குத்தொகை மட்டும் ரூ. 17 கோடியே 56 லட்சம் என்று தெரிவித்துள்ளார்.
ரிலையன்ஸ் நிறுவனத்தில்
ரூ. 2 கோடியே 15 லட்சம் அளவிற்கு பங்குவைத்துள்ள அமித்ஷா,
டிசிஎஸ் நிறுவனத்தில்
ரூ. 1 கோடியே 6 லட்சம்,
அல்ட்ரா டெக் சிமெண்ட் நிறுவனத்தில்
ரூ. 97 லட்சம்,

எச்யுஎல் நிறுவனத்தில் ரூ.83 லட்சம்,
எல் அண்ட் டி நிறுவனத்தில் ரூ. 78 லட்சம், மாருதி சுசுகி நிறுவனத்தில்
ரூ. 65 லட்சம்,
பி அண்ட் ஜி நிறுவனத்தில் ரூ. 62 லட்சம், எம்ஆர்எப்நிறுவனத்தில் ரூ. 56 லட்சம், கோல் கேட் நிறுவனத்தில் ரூ. 50 லட்சம், ஐடிசிநிறுவனத்தில் ரூ. 45 லட்சம், கிராசிமில்நிறுவனத்தில் ரூ. 22 லட்சம் என்று பங்குகளை வாங்கிக் குவித்துள்ளார்.
அங்கீகரிக்கப்பட்ட 200 நிறுவனங் களில் மட்டுமன்றி, அங்கீகரிக்கப்படாத 80 நிறுவனங்களிலும் எக்கச்சக்கமாக பணத்தை முதலீடு செய்துள்ளார்.
இவைதவிர, தன் பெயரில் ரூ. 1 கோடியே 25 லட்சம் அளவிற்கு விவசாய நிலம்,
ரூ. 6 கோடிக்கு விவசாயம் அல்லாத நிலம், மனைவி சோனல் பென் பெயரில் ரூ. 3 கோடியே 90 லட்சத்திற்கு சொத்து, ரூ. 35 லட்சத்து 29 ஆயிரத்திற்கு
தங்க நகைகள், ரூ.63 லட்சத்திற்கு வைரக் கற்கள் இருப்பதாகவும் அமித்ஷா கணக்கு காட்டியுள்ளார்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக