புதன், 3 ஏப்ரல், 2019

2019 தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும்.. இன்றைய தேதி உத்தேச கருத்து கணிப்பு

Swathi K : 2019 தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும்? (ஏப்ரல் நிலவரப்படி)
(Please check the image for detailed report)
இன்றைய நிலையில் இருந்து 2019 தேர்தலை பார்க்கும் போது முடிவுகள் எப்படி இருக்கும்..
ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள தனிப்பட்ட அரசியல் கணிப்பாளர்களின், பத்திரிக்கையாளர்களின் தகவல், கடந்த இரண்டு ஆண்டுகளில் நடந்த பாராளுமன்ற, சட்டசபை இடைத்தேர்தல்கள் , கல்லூரி/ பல்கலை தேர்தல்கள், உள்ளாட்சி தேர்தல்கள், சட்டசபை தேர்தல்கள், இப்போதுள்ள கூட்டணி சூழல், கட்சிகளின் ஓட்டு சதவிகிதம் வளர்ச்சி/ வீழ்ச்சி, மக்களின் மனநிலை இதையெல்லாம் ஆய்வில் கொண்டு கணிக்கப்பட்டது..
1. தற்போதுள்ள சூழ்நிலையில் கட்சிகளின் கூட்டணிகள் நிலை என்ன?
UPA - Congress + DMK(TN) + NCP(Maharastra) + RJD(Bihar) + JDS(Karnataka) + JMM(Jharkhand) + Communist (statewide decision) + Small parties.
NDA - BJP + Nitish's JDU(Bihar) + Ram Vilas Paswan's LJP(Bihar) + Shiromani Akali Dal (Punjab) + Shiv Sena (Maharashtra) + ADMK, PMK, DMDK in TN + Small parties
Post-Poll Alliance Possibility:
1. UPA - SP, BSP, Trinamool, TDP & Communist
2. NDA - YSR Congress, TRS & BJD
2. பாகிஸ்தான் தாக்குதல் எந்த அளவுக்கு மோடி செல்வாக்கை கூட்டி இருக்கிறது?
கடைசி சில மாதங்களில் தேர்தலுக்காக மோடி செய்யும் நாடகங்கள் எல்லாம் மறுபடி மறுபடி அவரின் பக்தர்களை மட்டுமே உற்சாகப்படுத்தியது.. அதை தாண்டி பெரிய அளவுக்கு எதுவுமே எடுபடவில்லை.. பாகிஸ்தான் மீது தாக்குதல் நடந்த சில நாட்களுக்கு வடமாநில மக்கள் மத்தியில் மோடியின் செல்வாக்கு உயர்ந்தது உண்மை.. ஆனால் அது கொஞ்சம் கொஞ்சமாக வீழ்ந்து மறுபடி ஜனவரியில் மோடிக்கு எந்த செல்வாக்கு இருந்ததோ அந்த நிலைக்கு வந்துவிட்டது.

3. மோடியின் தேர்தல் பிரச்சாரம் எப்படி?
இந்த முறை மோடி தோற்க அவரது தேர்தல் பிரச்சாரம் ஒரு முக்கிய காரணமாக இருக்கும்.. அவரிடம் பேச பெரிய சரக்கு இல்ல.. வழக்கம் போல அரைச்ச மாவையே அரைக்கிறார் என்பது பிஜேபி தொண்டனுக்கே தெரியவந்துவிட்டது..
4. 2014 & 2019 ஒப்பீடு?
2014 - காங்கிரஸ் மேல் மக்களின் அதிருப்தி, மோடியின் மேல் நம்பிக்கை, முதல்முறை ஓட்டு போடும் இளைய தலைமுறை மோடி மேல் வைத்த நம்பிக்கை.. இவையெல்லாம் சேர்ந்து தான் மோடிக்கு வெற்றியை தேடி தந்தது.
2019 - மோடி மேல் இதுவரை இல்லாத மிகப்பெரும் அதிருப்தி, ராகுல் மேல் கூடிய நம்பிக்கை, மாநில கட்சிகளின் வளர்ச்சி, முதல்முறை ஓட்டு போடும் இளைய தலைமுறைக்கு மோடி "வாயில் வடை சுடுபவர்", "பொய்யர்" என்று தெரியவந்தது. இவையெல்லாம் சேர்ந்து தான் மோடிக்கு தோல்வியை தேடித்தர உள்ளது.
5. EVM மற்றும் பல பிஜேபி கோல்மால்களால் அவர்களுக்கு வெற்றி கிடைக்குமா?
EVM மூலம் சில சதவிகித வாக்குகள் மாறலாம்.. ஆனால் முடிவை தீர்மானிக்க முடியாது.. அந்த சில சதவிகித ஓட்டு கோல்மாலையும் தாண்டி பிஜேபி தோல்வி உறுதி..
6. 2019 தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும்?
UPA (காங்கிரஸ்+): 210-230 (காங்கிரஸ்க்கு தனியாக 155-165 இடங்கள் வரை கிடைக்கலாம்).
NDA (பிஜேபி+): 171-191 (பிஜேபிக்கு தனியாக 135-145 இடங்கள் வரை கிடைக்கலாம்)..
மற்றவர்கள் (தேர்தலுக்கு முன் UPA & NDAவில் இல்லாதவர்கள்): 139 - 159
நாட்கள் செல்ல செல்ல ஆளும் கட்சி மீது அதிருப்தி அதிகமாக வாய்ப்புள்ளது.. + மோடியால் தனது பேச்சின் மூலம் ஓட்டை கவரும் வித்தையும் போச்சு.. அவர் இனி என்ன பேசினாலும் மக்களுக்கு அது பொய்யாக, காமெடியாக தான் தெரியும்.. பிஜேபி கோட்டையிலேயே இது தான் கதை என்றால்.. மற்ற மாநிலங்களில் கேக்கவேண்டாம்..
காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியிட்டபின்.. சரியாக காங்கிரஸ் அதை மக்களுக்கு கொண்டுசென்றால் நான் மேலே சொன்ன நம்பரில் இருந்து 15-25 கூட வாய்ப்புள்ளது..
தேர்தல் நெருங்க நெருங்க நான் சொன்னதில் பிஜேபி எண்ணிக்கை குறைந்து காங்கிரஸ் எண்ணிக்கை கூட வாய்ப்பிருக்கிறது.. ஆனால் பிஜேபி எண்ணிக்கை கூட வாய்ப்பேயில்லை
7. தேர்தலுக்கு பின்பு கூட்டணி எப்படி இருக்கும்?
காங்கிரஸ் கூட்டணியில் மாயாவதி, அகிலேஷ், மம்தா, நாயுடு, கம்யூனிஸ்ட் மற்றும் சில சின்ன கட்சிகள் இருப்பார்கள்.. பிஜேபியை ஜெகன் மோகன் YSR காங்கிரஸ், சந்திர சேகர் ராவ் TRS, பிஜு ஜனதா தளம் போன்ற கட்சிகள் ஆதரிக்கலாம் தேவைப்பட்டால்.
8. யார் ஆட்சி அமைக்க வாய்ப்பிருக்கிறது?
காங்கிரஸ் தலைமையில் கூட்டணி ஆட்சி. அதில் "மாயாவதி, அகிலேஷ், மம்தா, நாயுடு, கம்யூனிஸ்ட்".. இந்த ஐந்து கட்சியும் இருக்கும்.. இதில் மூன்று கட்சி ஆதரவு கொடுத்தாலே போதும் காங்கிரஸ் ஆட்சி அமைக்க.. காங்கிரஸ் முக்கியமான அமைச்சர்கள் பதவிகளை கூட்டணிக்கு கொடுத்தாவது ராகுல் காந்தியை பிரதமர் ஆக்க முயற்சிப்பார்கள்.. ராகுல் தான் அடுத்த பிரதமர்.. அதற்கு தான் வாய்ப்பு அதிகம்..
9. யாரெல்லாம் பிஜேபிக்கு ஓட்டு போட மாட்டார்கள்??
முதல் முறை ஓட்டு போடும் இளைய தலைமுறை (10-15% of total voters) தான் மோடியை சென்றமுறை வெற்றி பெற வைத்தார்கள்.. மோடி வந்தால் இந்தியா வல்லரசு ஆகும் என்று நம்பிய படித்த அரைவேக்காடு மக்கள் தான் அதிக அளவில் மோடிக்கு ஓட்டு போட்டார்கள்.. 2019ல் முதல்முறை ஓட்டு போடும் 80% மக்கள் பிஜேபிக்கு வோட்டு போட வாய்ப்பில்லை.. விவசாயிகள், சிறு/ குறு தொழில்கள் செய்வோர் அவருக்கு வோட்டு போட வாய்ப்பில்லை.. இதோடு சிறுபான்மை மக்களையும் சேர்த்துக்கொள்ளுங்கள்..
As per current situation, 2019 result will be sligtly better than 2004 result (UPA was 218 in 2004 - Pre-poll Alliance) for UPA.
- Swathi K

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக