வியாழன், 11 ஏப்ரல், 2019

கொள்ளையனிடமிருந்து 100 சவரன் நகைகள் பறிமுதல்.. விடுப்பில் சென்று நகைகளை பங்கு போட்ட காவலர்கள்

காவலர்கள்
tamiloneindia :சென்னை: சென்னையில் நகை கொள்ளையனிடமிருந்து பறிமுதல் செய்த நகைகளை காவலர்களே பங்கு போட்டுக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் அவ்வப்போது நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு வந்தன. இந்தநிலையில் இந்த கொள்ளையர்களை பிடிப்பது போலீஸாருக்கு பெரும் சவாலாக இருந்தது.
சென்னை அசோக் நகர் காவல் நிலைய போலீஸார் ஆரி பிலிப் என்ற கொள்ளையனைபோலீஸார் பிடித்தனர்.
அவர் கொள்ளையடித்த 100 சவரன் நகைகளை விற்பனை செய்ததாக கூறப்படுகிறது. திருடிய நகைகள் இந்த தகவலின் அடிப்படையில் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது போலீஸாருக்கு பல்வேறு பகீர் தகவல்கள் கிடைத்துள்ளன. அதில் கோடம்பாக்கம் காவல் நிலையத்தில் உள்ள காவலர்கள் ஆரி பிலிப் திருடிய நகைகளை பறிமுதல் செய்தனர். காவலர்கள் பின்னர் தங்களுக்குள்ளாகவே பங்குப் போட்டுக் கொண்டனர் என ஆரி பிலிப் வாக்குமூலம் அளித்துள்ளார்.

 இதனால் ஆரி பிலிப் மீது அந்த காவலர்கள் வழக்கு பதிவு செய்யாமல் விட்டுவிட்டதாகவும் தெரிகிறது. வழக்கு விசாரணை இதையடுத்து அசோக் நகர் போலீஸார் இந்த விவகாரத்தை உயரதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியுள்ளனர்.

இதையடுத்து தெற்கு மண்டல இணை ஆணையர் மகேஸ்வரி இந்த வழக்கை விசாரித்து வருகிறார். பெரும் பரபரப்பு வேலியே பயிரை மேய்ந்த கதையாக கொள்ளையனிடமிருந்து நகைகளை பிடுங்கி போலீஸாரே பங்கு போட்டுக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் வரும் நிலையில் தமிழக அரசுக்கு களங்கம் ஏற்படும் நிலையில் இந்த சம்பவம் உள்ளது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக