சனி, 30 மார்ச், 2019

படப்பிடிப்பில் வெடி விபத்து - இரு பெண்கள் உயிரிழப்பு.. .. Woman, Her 5-year-old Daughter Killed During Shooting of Film Stunt in Bengaluru

மாலைமலர் :பெங்களூரு அருகேயுள்ள பாகலூரு பகுதியில் இன்று நடைபெற்ற ‘ரணம்’
திரைப்படத்தின் படப்பிடிப்பில் ஏற்பட்ட வெடி விபத்தில் 8 வயது சிறுமி உள்பட இரு பெண்கள் உயிரிழந்தனர்.
பெங்களூரு படப்பிடிப்பில் வெடி விபத்து - இரு பெண்கள் உயிரிழப்பு பெங்களூரு: வி.சமுத்ரா இயக்கத்தில் சிரஞ்சீவி சார்ஜா, சேத்தன் நடிப்பில் ‘ரணம்’ என்ற பெயரில் கன்னட மொழிப்படம் தயாராகி வருகிறது. இந்த படத்தின் சண்டைக் காட்சிக்கான படப்பிடிப்பு பெங்களூரு அருகேயுள்ள பாகலூரு பகுதியில் இன்று நடைபெற்றது.
காட்சி அமைப்பின்படி கார் மோதி தீபிடிப்பது போன்ற அமைப்புகள் செய்யப்பட்டபோது அங்கிருந்த ஒரு எரிவாயு சிலிண்டர் திடீரென்று வெடித்து சிதறியது.
 இந்த விபத்தில் படப்பிடிப்பை பார்க்க வந்திருந்த சுமைரா(28), ஆயிரா(8) ஆகிய இரு பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். காயத்துடன் ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வரும் நிலையில் இவ்விபத்து தொடர்பாக பாகலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக